இப்படி செஞ்சு பாருங்க!... அப்புறம் நகம் கடிக்கும் பழக்கம் வரவே வராது?

Report Print Nalini in ஆரோக்கியம்

நகம் கடிக்கும் பழக்கம் கெட்டப்பழக்கம் என்று நம் தாத்தா பாட்டி சொல்லிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆமாம், நம் நகத்தில் பல்வேறு விதமான அழுக்குகள் இருக்கும். அதில் கிருமிகள் ஒளிந்திருக்கும்.

நாம் நகத்தை கடிக்கும்போது அவை நம் வாய்வழியாக உடல் உள்ளே சென்றுவிடும். இதனால் பல நோய்கள் வரக்கூடும். இதனால்தான் நம் தாத்தா பாட்டி நகத்தை கடிக்கக்கூடாது என்று திட்டுவார்கள்.

இப்படி நகம் கடித்துக்கொண்டே இருந்தால் இந்த பழக்கம் நம் நம் பற்களையும் சேதப்படுத்தும்.

இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த என்ன செய்யலாம் என்று பார்ப்போம்

 • முதலில் நகத்தை அவ்வப்போது சுத்தமாக வெட்டி விட வேண்டும். இதனால் நகம் கடிக்க முடியாமல் போகும்.
 • ஞாபகம் இல்லாதவர்கள் நம் மொபைல் போனில் கூட ரிமைண்டர் வைத்துக்கொள்ளலாம்.
 • ஆண்கள் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை வேலைக்கு செல்லும் பொழுது சேவ் செய்வது போல அனைவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியமாக செய்ய வேண்டும்.
 • பெண்கள் அடிக்கடி மெனிக்யூர் செய்து பழகலாம். உங்களுக்கு அதிகமான நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் நிச்சயமாக நீங்கள் மெனிக்யூர் செய்ய வேண்டும்.
 • இது உங்கள் நகங்களையும் விரல்களையும் அழகாக அது மட்டுமில்லாமல் உங்கள் நகங்களில் உள்ள கிருமிகளையும் எடுத்துவிட்டு ஆரோக்கியமாக வைக்கும்.
 • மேலும் நகங்களை வெட்டி விட்டு மெனிக்யூர் பண்ணும்பொழுது நகங்களும் விரல்களும் அழகாகவும் தெரியும்.
 • உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் அதிகமாக நம் நகத்தை கடிக்கும் பழக்கம் இருக்கும் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • எனவே உங்களுக்கு நகம் அதிகமாக கடிக்கும் பழக்கம் இருந்தால் பால் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அதிகமான கால்சியம் இருக்கிறது. மேலும் கால்சியம் தரக்கூடிய அனைத்து உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
 • உங்கள் நகங்களில் தினமும் வேப்பிலை பேஸ்ட்டை லேசாக தடவிக் கொண்டால் நகம் கடிக்க பிடிக்காது. வேப்பிலை கிருமி நாசினியும் கூட. ஆனால் நகங்களில் வாய் வைக்கும் பொழுது நமக்கு கசந்து விடும். எனவே நகங்களை கடிக்கும் பழக்கத்தை நாம் குறைத்து கொள்ள இது உதவும்.
 • சிலருக்கு மன உளைச்சல் அதிகமாக இருந்தால் நகம் கடிக்கும் பழக்கம். நகம் கடிக்க கூடாது என்று நீங்கள் உங்கள் மனதில் ஒரு நிபந்தனையை போட்டுக் கொள்ளுங்கள்.
 • கையில் கிளவுஸ் அணிந்து கொண்டால் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்