தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

இஞ்சி பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல, அதிலிருக்கும் மருத்துவ குணங்களும்தான். உண்மையில் இது ஒரு அற்புதமான தாவரமாகும.

இஞ்சியின் சுவை மிதமானதாக இல்லை என்றாலும் அதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலில் பல அதிசயங்கள் ஏற்படும். ஆரம்பத்தில் தினமும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம் ஆனால் அதன் சுவை பழகிவிட்ட பிறகு அந்த சுவை நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால் ஏற்படும் நன்மைகள் :

 • தினமும் இஞ்சியை சாப்பிட்டால் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் அழற்சியின் வெளிப்பாட்டைக் குறைக்கிறது.
 • உலகம் முழுவதும் மக்களுக்கு பொதுவாக இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று எடை அதிகரிப்பு ஆகும். இஞ்சியை தினமும் ஒரு வேளை எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும்.
 • தினமும் இரண்டு கிராம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சர்க்கரை 12 சதவிகிதம் குறையும்.
 • அஜீரண பிரச்சினைகளுக்கு இயற்கையாக நிவாரணமளிக்கும் பொருட்களில் ஒன்று இஞ்சி. குமட்டலுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இது நம் உடலில் இயற்கையான ஆண்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. இஞ்சி சாப்பிட்டபிறகு நீங்கள் திருப்தியான உணர்வை உணர்வீர்கள்.
 • 1 கிராம் இஞ்சியை உணவில் சேர்த்து கொண்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். பெண்களின் மாதவிடாய் வயிற்று வலி குறையும்.
 • புற்றுநோய் போல மிகவும் பரவலாக காணப்படும் நோயாக அல்சைமர் நோய் மாறிவிட்டது. இஞ்சி இந்நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. தினமும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் அல்சைமரில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
 • இஞ்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் முழங்கை பிரச்சினையால் ஏற்படும் வலி குறையும். 11 நாட்களுக்கு இரண்டு கிராம் இஞ்சியை உட்கொண்டு வந்தால் வலி குறைவதை நீங்களே உணர்வீர்கள்.
 • சரும பொலிவு இஞ்சி சிறந்த முறையில் பயன்படுகிறது.
 • இஞ்சியை தினமும் சாப்பிட்டால் உங்கள் செரிமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் இஞ்சி உங்கள் இரைப்பைக் குழாயிலிருந்து எதிர்மறை விளைவுளை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்களை விரைவாக வெளியேற்றும்.
 • தினமும் இஞ்சி உணவில் சேர்த்துக் கொண்டால் தொற்றுநோய்களிலிருந்து விடுபடலாம். இஞ்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதிலிருக்கும் ஜிஞ்சரால் பல பாக்டீரியாக்களை தடுக்கிறது.
 • தினமும் இஞ்சி சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படும் மார்பில் எரியும் வலி குறைந்து நிவாரணம் பெறும். நெஞ்செரிச்சல் நோயால் நீங்கள் தாக்கப்பட்டால், சிறிது இஞ்சியை கையில் வைத்திருப்பது மருந்தகத்திற்கான பயணத்தை மிச்சப்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்