ஆரம்பத்தில் அல்சரை கண்டறிந்தால் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்! குணப்படுத்திவிடலாமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினையில் அல்சரும் ஒன்றாக கருதப்படுகின்றது.

விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் போன்ற காரணங்களால் இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது.

குறிப்பாக இன்றைய அவசர உலகில் தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகின்றது.

இது பாதிக்கப்பட்டவரைப் பலவிதத் தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். அல்சர் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்போதே தடுக்கலாம்.

இதற்கு சில இயற்கை உணவுகளை தவறாமல் எடுத்து கொண்டால் கூட இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர முடியும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

vectorstock
  • மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி பாசிப்பருப்புடன் வேகவைத்து தேங்காயெண்ணெயில் தாளித்து உடன் தேங்காய்த்துருவலை சேர்த்து கொதிக்க வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். ஒரு கப் சாதத்துக்கு இரண்டு கப் கீரையை சேர்த்து கொள்ளவும். மணத்தக்காளி சூப் காட்டிலும் இம்முறையில் அதிக அளவு கீரையை உட்கொள்ளமுடியும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டாலே பலன் தெரியும்.
  • அகத்திக்கீரையை துவரம்பருப்புடன் கலந்து வேக வைத்து தேங்காய்த்துருவல் சேர்த்து கூட்டாக்கி நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்கவும். இவை உணவுக்குழாய் முதல் குடல் புண் வரையும், மலக்குடலையும் சுத்தம் செய்து புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது. எனினும் அல்சர் இருப்பவர்கள் 15 நாளுக்கு ஒருமுறை ஒரு கப் அளவு எடுத்துகொள்ளலாம். இதனால் பலனும் கிடைக்கும்.
  • காலை வேளையில் தேங்காய்ப்பால் சேர்த்த உணவு எடுத்துகொள்ள வேண்டும். ஆவியில் வேக வைக்கப்பட்ட இடியாப்பம், இட்லி உடன் ஒரு டம்ளர் தேங்காய்ப்பால் தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும்.
  • தினமும் கொப்பரைத்தேங்காய் உள்ளங்கையில் பாதி அளவு எடுத்து மென்று உமிழ்நீரோடு மென்று விழுங்க வேண்டும்.
  • நன்றாக கனிந்த வாழைப்பழம் மலைவாழைப்பழம், ஏலக்கி, செவ்வாழை,பச்சை வாழைப்பழம் நன்றாக கனிய வைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
  • மாதுளம்பழத்தை சாறு பிழிந்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
  • ஆப்பிள் சாறும் குடிக்கலாம். ஃப்ரெஷ்ஷாக இருக்கும் திராட்சை பழங்களை சாறாக்கி இனிப்பு சேர்க்காமல் தேவையெனில் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.
  • கொத்துமல்லி,புதினா சேர்த்து சாறாக்கி சிட்டிகை உப்பு, சிட்டிகை மிளகு சேர்த்து குடித்து வரலாம்.
  • வெள்ளரிக்காய் சாறு, நுங்கு, இளநீர் போன்றவை அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு கோடைக்காலத்தில் அருமருந்தாக இருக்கும்.
  • நார்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் இதை தினம் ஒன்றாக எடுத்துவந்தால் அல்சர் பிரச்சனை வேகமாக தீரும்.
  • தினம் ஒரு கப் தயிர் அல்சர் இருப்பவர்களுக்கு தீர்வு கொடுக்கும். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. 100 மில்லி அளவு ஒரு கப் தயிர் எடுத்துகொள்ள வேண்டும். பசுந்தயிர் சிறந்த பலன் தெரியும்.
  • அல்சர் தீவிரமாக இருக்கும் போது வாய்ப்புண் சேர்ந்திருக்கும். அப்போது மோரில் சிட்டிகை சீரகத்தை பொடித்து கலந்து குடித்து சில நிமிடங்கள் வாயில் வைத்திருந்து விழுங்கினால் பலன் கிடைக்கும். தினமும் இரண்டு டம்ளர் அளவு எடுத்துகொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்