தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சீங்கன்னா எப்படி உங்கள் எடை குறையுதுன்னு பாருங்க!

Report Print Nalini in ஆரோக்கியம்

இன்றைய தலைமுறையில் இருக்கும் இளைஞர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே பிரச்சினைதான் அது எடை அதிகரிப்பு.

இது உடல் எடை அதிகமுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கலாம். உடல் எடையை குறைக்க நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்திருக்கலாம். எதுவும் உங்களுக்கு பயன் கிடைக்காமல் போயிருக்கும்.

கவலை வேண்டாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உண்மையில் இது நீரேற்றம் மற்றும் ஆரோக்கியமாக இருக்க எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.

கோடை காலம் உச்சத்தை எட்டும் நிலையில், நீரேற்றத்துடன் இருப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

விரைவில் உடல் எடை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்

  • தினமும் 8 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க மறக்காதீங்க.
  • நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் உண்மையில் அதைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது.
  • ஒவ்வொரு நாளும் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால் கலோரிகளை வேகமாக எரிக்கலாம்.
  • தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளையும், கொழுப்பிலிருந்து நச்சுகளையும் தண்ணீர் நீக்கிவிடும்.
  • உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது உங்கள் பசியை குறைக்கும்.
  • அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், காலை உணவுக்கு முன் (அல்லது எழுந்தவுடன்) தண்ணீரைக் குடிக்கும் பெரியவர்கள், தண்ணீர் குடிக்காதவர்களை விட 44% அதிக எடையைக் குறைத்துள்ளனர்.
  • நீர் இயற்கையாகவே பூஜ்ஜிய கலோரி ஹைட்ரேட்டிங் பானமாகும். இது சர்க்கரை நிறைந்த பானங்களுடன் ஒப்பிடும்போது, உங்கள் ஒட்டுமொத்த கலோரி அளவை கவனித்துக்கொள்கிறது.
  • நீண்ட காலமாக, உடல் பருமன் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க இது உதவும்.
  • தண்ணீர் அதிகமாக குடித்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்