டீயில் கொஞ்சம் அதிமதுரமும் கிராம்பு சேர்த்து தினமும் குடிச்சு பாருங்க.. எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
545Shares

பொதுவாக நம் காலையில் எழுந்தவுடன் உடலுக்கு உற்சாகம் அளிக்க குடிக்கும் ஒரு பானம் தான் டீ.

டீயில் சுவையையும் தாண்டி, தேயிலையில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்ட் நம்மை நாள் முழுவதும் மிக ஆற்றல் வாய்ந்ததாக வைத்திருக்க உதவுகிறது.

டீயில் இன்னும் சில மருத்துவ குணம்மிக்க மூலிகைகள் மற்றும் மசாலா பொருள்கள் சேர்க்கின்ற பொழுது கூடுதல் சுவையும் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.

குறிப்பாக, அதிமதுரம், கிராம்பு போன்றவற்றை டீயில் சேர்க்கும் போது உடலில் உள்ள தலைவலி, தொண்டைவலி போன்ற நோய்களிடமிருந்து விடுதலை அளிக்கின்றது.

அந்தவகையில் இந்த சூப்பரான நோய் தீர்க்கும் டீயை எப்படி தயாரிப்பதும், அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையானவை
 • அதிமதுர பட்டை - ஒரு துண்டு
 • கிராம்பு - சிறிதளவு
 • டீத்தூள்
 • தேன் அல்லது சர்க்கரை - தேவைப்பட்டால்
செய்முறை

 • அதிமதுர பட்டை ஒரு துண்டுடன் சிறிது கிராம்பு சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • இந்த பொடியில் ஒரு ஸ்பூன் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரையும் அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
 • இப்போது உங்களுக்குப் பிடித்த டீத்தூள், க்ரீன் டீ என உங்கள் விருப்பப்படி ஒரு டீயை போடுங்கள். பால் டீ விருப்பமுள்ளவர்கள் அப்படியே பால் சேர்த்தும் போட்டுக் கொள்ளலாம்.
 • அதிமதுரம் மிக அதிக இனிப்புடன் இருக்கும். அதனால் சுவைத்துப் பார்த்துக் கொண்டு தேன் அல்லது சர்க்கரை தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.
நன்மைகள் என்ன?
 • அதிமதுரம் சுகப்பிரசவம் ஆவதைத் தூண்டுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, வயிற்றுப் புண்களை ஆற்றவல்லது.
 • அதிமதுரம் தொப்பையைக் குறைக்கும். மூட்டு வலி, தொண்டை வலி, கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது.
 • தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகள் ,சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக கிராம்பு இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்