தினமும் ஊறவைத்த தேன் பூண்டை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது.

பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்த பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

தேன் பூண்டை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்

 • பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
 • ஒரு வாரக் காலம் வரை இதை ஊற வைக்க வேண்டும்.
 • ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும்.
 • பூண்டு, தேன் நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

தேன் பூண்டை பயன்கள்

 • கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கும்.
 • தமணிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
 • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
 • உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
 • உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கிறது.
 • எலும்புகளின் வலிமை அதிகரிக்கிறது.
 • அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்