இரவு வறட்டு இருமல் குறைய வீட்டு வைத்தியம்

Report Print Nalini in ஆரோக்கியம்

இந்த இருமலை பொறுத்த வரை சளியினால் ஏற்படுவது இல்லை, அதற்கு மாற்றாக வைரஸ் அல்லது இதர தொற்றுகள் காரணமாக ஏற்படுகிறது.

இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும்.

தொடர்ந்து நாள்பட்ட வறட்டு இருமல் சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் மற்றும் இதர காரணங்களால் இந்த வறட்டு இருமல் பிரச்சனை வரும்.

இரவு வறட்டு இருமல் குறைய வீட்டு வைத்தியம்

  • ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள், தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடனே வறட்டு இருமல் சரியாகும்.
  • இஞ்சியில் அதிகளவு அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. வறட்டு இருமலுக்கு இது ஒரு சிறந்த நிவாரணி.
  • ஒரு துண்டு இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மென்றால் வறட்டு இருமல் குணமாகும்.
  • எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. கிருமிகளை நோக்கி எதிர்த்து போராடி நமக்கு வறட்டு இருமல் வராமல் பாதுகாக்கிறது.
  • எனவே தினமும் பலமுறை இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடனே வந்த வறட்டு இருமல் குணமாகும்.
  • வறட்டு இருமல் ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
  • வறட்டு இருமல் சரியாக தினமும் மசாலா டீ அருந்தி வரலாம், மசாலா டீயை தினமும் அருந்தி வருவதினால் அவற்றில் இருக்கும் மருத்துவப் பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற பொருட்கள் தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் உடனே சரி செய்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்