தூக்கமின்மை பிரச்சினையால் அவதியா? தப்பி தவறி கூட இரவு நேரங்களில் இந்த உணவுகளை எடுத்து கொள்ளாதீங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இதனால், பகல் நேரங்களில் சரிவர செயல்பட முடியாமல் சோர்வாக காணப்படுவதுடன், விரைவிலேயே தீவிர உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடலாம்.

தூக்கமின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானவை சில உணவுகளே காரணமாக அமைகின்றது.

குறைந்தது இரவு நேரத்திலாவது அதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் சில உணவுகள் நரம்பின் செயல்பாட்டை பல மடங்கு அதிகரித்துவிடுவதோடு தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கிவிடுகிறது.

அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • இரவு நேரங்களில் தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலம் சிறுநீர் கழிக்க அவ்வபோது எழ வேண்டியதாக இருக்கும். இதனால் தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும்.
  • காபியில் இருக்கும் காஃபின் ஹார்மோன்களின் உணர்ச்சியை அதிகமாக்கிவிடும். இந்த பாதிப்பு பலமணி நேரங்கள் வரை உடலில் தாக்கத்தை உண்டாக்கிவிடும் என்பதால் தூங்குவதற்கு பல மணி நேரம் முன்பே காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
  • இரவு நேரத்தில் பழச்சாறுகள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அமிலம் நிறைந்த பழச்சாறுகளில் கூடுதலாக இனிப்புக்காக சேர்க்கப்படும் சர்க்கரை நிச்சயம் தூக்கத்தை கெடுக்கும்.
  • சோடாவில் இருக்கும் சர்க்கரை மோசமான தூக்கமின்மையை உண்டாக்கும். அமைதியற்ற தூக்கத்தை உண்டாக்கும்.
  • ஆல்கஹால் அல்லது சாதாரணமான சிவப்பு ஒயின் கூட தூக்கத்தை கெடுக்க உதவும். மற்றும் ஆல்கஹால் மனதுக்குள் ஒருவித பதட்டத்தையும் தூக்கத்தையும் கெடுக்கிறது என்பதால் மதுப்பபழக்கம் இருப்பவர்கள் அதை தவிர்ப்பது நல்லது.
  • இரவு நேரங்களில் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதே போன்று பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகளையும் தவிர்க்கவேண்டும். இதில் இருக்கும் டைரமின் என்னும் அமினோ அமிலமானது தூக்கமின்மையை உண்டாக்கும்.
  • சாஸ் வகைகள் அமிலத்தன்மை கொண்டிருப்பதால் நெஞ்செரிச்சல் அஜீரணத்தை உண்டாக்கி இரவில் தூக்கத்தின் அமைதியை கெடுக்கின்றன.ஏற்கனவே தூக்கமின்மை பிரச்சனை கொண்டிருப்பவர்கள் இந்த உணவை அதிகம் எடுத்துகொள்வது இன்னும் அதிக தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்