உடல் பருமனை குறைத்து அடையாளம் தெரியாத அளவில் மெலிந்தது எப்படி? ரகசியத்தை உடைத்த பிரபல இசையமைப்பாளர்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சைமன் உடல் பருமனாக இருந்த நிலையில் மெலிந்த தோற்றத்தை அடைந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

சத்யா, கொலைகாரன், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், கபடதாரி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர் சைமன்.

மிகவும் உடல் பருமனான தோற்றத்துடன் இருந்த சைமன், உடல் எடையைக் குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதில் ‘கடந்த 4 மாதங்களில் நான் என்ன செய்தேன் என்று தெரியவேண்டுமா?’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரிடம் உடல் எடை குறைந்த ரகசியம் என்ன என்று கேட்டு வந்தனர். இதுகுறித்து சைமன் கிங் கூறுகையில், முதலில் 3 கிலோ குறைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் முடிவு செய்தேன். அந்த எடையை இழந்தது தொடர்ந்து எடை குறைப்பதற்கு உத்வேகமாக அமைந்தது.

என் உடல்நலம் குறித்த அக்கறை எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஊரடங்கின் ஆரம்பத்தில் உணவு டெலிவரி செயலிகள் செயல்படாமல் போனபோதுதான் அந்த மாற்றம் நிகழ்ந்தது.

ஊரடங்கு என்னை வீட்டு உணவு சாப்பிடுவதற்கு நிர்பந்தப்படுத்தியது. இதனால் நேர்மறையான முடிவுகள் தெரிய ஆரம்பித்ததால், உணவு டெலிவரி ஆப்களை என் போனிலிருந்து நீக்கிவிட்டேன். ‘ஜங்க்’ வகை உணவுகளுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

ஊரடங்கால் ஜிம்களும் மூடப்பட்டு விட்டதால் வீட்டிலேயே அதி தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். இதன் விளைவாக தற்போது 24 கிலோ எடை குறைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்