குடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளியேற்ற வேண்டுமா? அப்போ அடிக்கடி இந்த ஜூஸை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
2238Shares

குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது ஆகும். இது இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது .

இது இருவகைப்படும் சிறுகுடல், பெருங்குடல். இதில் பெருங்குடல் உடலில் உள்ள நச்சுக்கள், கெமிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தும் சேர்மங்களை நீக்குகிறது.

குடலை மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது அவசியமாகும். ஏனெனில் குடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை சுத்தம் செய்யவிட்டால் அது பல நோய்களை ஏற்படுத்திவிடுகின்றது.

நவீன மருந்துகளின் உதவியால் குடல் நச்சுக்களைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும் இது நாளடைவில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இதனை தவிர்த்து விட்டு நற்பதமான மற்றும் பச்சையான காய்கறிகள், பழங்கள் போன்றவை இயற்கை முறையில் குடலை சுத்தமாக்க பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் குடலை எளிதில் சுத்தமாக்க கூடிய ஒரு சூப்பரான பானம் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையானவை

 • கற்றாழை இலை - பாதி
 • பச்சை அல்லது சிவப்பு ஆப்பிள் - 1
 • ஆரஞ்சு - 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)
 • அன்னாசி - 1 துண்டு
 • வெள்ளரிக்காய் - 1/2

செய்முறை

முதலில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் கற்றாழையை இரண்டாக வெட்டி, அதில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பிளெண்டரில், அனைத்துப் பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அதில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். அதுவும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளரும், மதிய உணவிற்கு முன் ஒரு டம்ளரும் குடிக்க வேண்டும்.

அதோடு தினமும் தவறாமல் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வதோடு, உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

boldsky

நன்மைகள்

 • மனநிலை மேம்படும்
 • வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் நீங்கும்
 • பிடிப்புக்கள் தடுக்கப்படும்
 • எடை இழப்பு
 • நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
 • கல்லீரல் செயல்பாடு தூண்டப்படும்
 • நச்சுக்கள் நீங்கும்
 • ஆற்றல் அதிகரிக்கும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்