இந்த நோய்காரங்க இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டா ஏற்படும் ஆபத்து என்னன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்
7566Shares

வாழைப்பழம் எளிமையான விலை குறைவான ஊட்டச்சத்து மிக்க உணவாக உள்ளது. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

வாழைப்பழத்தில் ஏரளாமான சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றன.

குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதிலிருக்கும் சர்க்கரை ஃப்ருக்டோஸ் வகையாகத் தான் இருக்கும்.

அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் எளிதில் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்.

அதனால் சோர்வாக உணரும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படும்.

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. இவை நம் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. அதோடு நம்முடைய ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவி செய்யும்.

வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரணும்.

இரவு நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து?

  • தூங்க சில நிமிடங்கள் முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை கிடையாது.
  • வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது அவசியம்.
  • வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவிக்கும்.
  • உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்தினையும் தாண்டி நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு அதீத பசி உண்டாகும். இதனை சரியாக்க நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக காலை உணவாக நீங்கள் இதனை எடுத்து வரலாம்.
  • காலையில் வாழைப்பாம் சாப்பிடுவதால் உங்களது இன்ஸுலின் அளவு அதிகரிக்கிறது. அதோடு பிற உணவுகளையும் நீங்கள் சேர்த்து சாப்பிடும் போது அவை உங்கள் ரத்தச் சர்க்கரையளவினை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்