பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தானது?

Report Print Nalini in ஆரோக்கியம்

பால் குடிப்பது கால்சியம் சத்தை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் புரோட்டீன் , பொட்டாசியம் , வைட்டமின் D , B12 ,A என பல நன்மைகளை தரும் பாலை சரியான நேரத்தில் குடித்தால்தான் இத்தனை நன்மைகளும் கிடைக்கும். அதுவே தவறாகக் குடித்தால் உடல் நலத்திற்கே ஆபத்தை விளைவிக்கும்.

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம்.

ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சில உணவுகளை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமாம்.

பால் அருந்திவிட்டு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்

பாகற்காய்

பாகற்காயை உட்கொண்ட பின் பால் குடிக்கவே கூடாது. ஏனெனில் பாகற்காய் சாப்பிட பின் பால் குடித்தால், அது முகத்தில் கருமையான புள்ளிகளை உண்டாக்கிவிடும்.

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிக்கவே கூடாது. இந்த இரண்டையும் ஒருவர் ஒன்றாக உட்கொண்டால், அது தீங்கு விளைவித்து விடும். அதுவும் பருப்பு வகைகளை உட்கொண்ட பின் பால் குடித்தால், அது அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் பாரமாக இருப்பது போன்றவற்றை சந்திக்க நேரலாம்.

இது தீவிரமடைந்தால் சில சமயம் மரணத்தினை கூட சிறுவர்களுக்கு ஏற்படுத்தி விடும்.

முள்ளங்கி

முள்ளங்கியை உட்கொண்டதும் பால் குடிக்கவே கூடாது. ஒருவேளை முள்ளங்கி உட்கொண்ட உடனேயே பால் குடித்தால், அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். ஒருவர் இவ்வாறு இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வைத்து விடும்.

மீன்

மீன் உட்கொண்டதும் பாலைக் குடித்தால் செரிமான மண்டலம் பாதிப்படையச் செய்து விடும். சில சமயங்களில் மீன் உட்கொண்டதும் பால் குடித்தால், ஃபுட் பாய்சனிங், அடிவயிற்று வலி மற்றும் உடலில் வெள்ளைப் புள்ளிகள் வந்துவிடும்.

பாலுடன் வாழைப்பழம்

பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு என்று ஆய்வுகளும் கூறுகின்றன. வாழைப்பழம் மட்டுமல்ல எந்த பழமாக இருந்தாலும் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிறுங்கள். குறிப்பாக அன்னாசி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களுடன் சாப்பிடாதீர்கள். இவை செரிமாணத்தை பாதிக்கும்.

காரசாரமான உணவை பின்

காரசாரமான உணவை சாப்பிட்டுவிட்டும் பால் குடிப்பது தவறு. அவ்வாறு குடிப்பதும் ஃபுட் பாய்சனாகும். எனவே ஒரு மணி நேர இடைவேளை அவசியம்.

எந்த உணவாக இருந்தாலும் பால் குடிப்பதாக இருந்தால் உண்ட உணவு செரிமானம் அடைந்ததாக நீங்கள் உணர்ந்த பின் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையெனில் தேவையற்ற உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்