மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Report Print Nalini in ஆரோக்கியம்
90Shares

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காலத்தில் கருப்பையின் உள் மடிப்புகளிலிருந்து இரத்த போக்கு என்பது மாதந்தேறும் ஒரு சுழற்சி முறையில் ஏற்படும்.

ஒரு பெண் கருத்தரிக்காத நேரங்களில் கருப்பையின் உள் மடிப்புகளில் உள்ள இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தமானது கழிவாக வெளியேறுகிறது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களாக இருக்கும்.

இன்னும் சில பெண்களுக்கு 21 நாட்களாகவும், வேறு சில பெண்களுக்கு 35 நாட்களாகவும் கூட இருக்கும். சாதாரணமாக மாதவிடாய் காலமானது 2-7 நாட்கள் வரை கூட இருக்கும். சராசரியாக 5 நாட்கள் வரை இருக்கும்.

இந்த காலப்பகுதிகளில் பெண்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

சில வகையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது சிறந்தது.

எந்தெந்த உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கக வேண்டும் என்று பார்ப்போம்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

 • வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் கேக் போன்றவை தவிர்க்க வேண்டும்.
 • கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • நன்றாக பொரிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், டோ நட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை சாப்பிட வேண்டும்.
 • கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்களாகும்.
 • உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது முக்கியமாகும்.
 • உப்பு சேர்த்து செய்யப்பட்ட நட்ஸ், ஸ்நேக்ஸ், ஊறுகாய், புகையால் சமைக்கப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகள், சீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவை உண்டாகும். இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது மாதவிடாய் காலத்தில் இது போன்ற உணர்ச்சிகளை அதிகரிக்கும். எனவே இது போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது சிறந்தது.
 • மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள், ஸ்வீட்ஸ், கேட், குக்கீஸ் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிப்பது நல்லது..
 • ஆல்கஹால் பருகுவது என்பது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். ஆல்கஹால் பருகுவதால் மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்க முடியாமல் போகும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கிறது.
 • கொழுப்பு நிறைந்த ரெட் மீட் ஆனது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியதாகும். இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் உடல் வலி உண்டாகுகிறது.
 • காபி, டீ, காஃபின் உள்ள உணவுகள், எனர்ஜியை கொடுக்கும் பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபின் நிறைந்திருப்பதால், இதனை மாதவிடாய் காலத்தில் தவிரக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு மன அழுத்தம் உண்டாகுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்