30 வயது கடந்த பல பெண்களுக்கு கருவுறாமைக்கான காரணம் இதுதான்?

Report Print Nalini in ஆரோக்கியம்

கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்கள் மூலம் ஏற்படுகிறது.

இதற்கான காரணங்களை அறிந்து கொண்டும், அதற்கான சிகிச்சைகளை எடுத்து கொள்வதால் கருவுறாமை பிரச்சனையிலிருந்து தம்பதிகள் விடுபடலாம்.

30 வயது கடந்த பெண்களுக்கு கருவுறாமைக்கு காரணங்கள் பற்றி பார்ப்போம்

  • அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கலும், கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருப்பை வாயில் பிரச்சனைகளும், மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாக உள்ளன.
  • அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகும். ஏனெனில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே இருக்கிறது.
  • ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படும்.
  • பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொறுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்பு இருக்கிறது.
  • கருவுறுதலுக்கு பங்கு வகிக்கும் சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது. இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடுமாம்.
எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம் ?
  • இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுமாம். இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
  • மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படும்.
  • லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
  • எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறியலாம். ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்