தண்ணீரை இப்படி குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது.

நமக்குக் குடிக்க, சமைக்க, சுத்தம் செய்ய மற்றும் குளிக்கத் தண்ணீர் முக்கிகயம்.

விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் படகு, கப்பல் போக்குவரத்திற்கும் இந்த இயற்கை வளம் நமக்கு உதவி செய்கிறது.

அதுமட்டுமின்றி தண்ணீர் நமது உடம்பில் உள்ள பல நோய்களை குணமாக்கும்.

வாரத்தில் ஒருமுறையவாது நீர் உண்ணாவிரதம் இருந்தால் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற, எடையை குறைக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க என பல நன்மைகளை வாரி வழங்கும்.

நீர் விரதத்தை மேற்கொண்டால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம்

  • நீர் விரதம் மேற்கொள்பவர்களில் 82 சதவீததினருக்கு இரத்த அழுத்தம் குறையும்.
  • ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்ளுவதனால் அதிகளவு எடை குறையும். இது பல்வேறு வகையான இதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து விடும்.
  • தொடர்ச்சியான உண்ணாவிரதம் இடுப்பு சுற்றளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் எல்.டி.எல் கொழுப்பு, லெப்டின் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி அளவைக் குறையும்.
  • பல எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் (ROS) குவிப்பு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் அதிகரிக்கும். ROS ஐ வெளியேற்றுவதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க நீர் உண்ணாவிரதம் உதவி செய்யும்.
  • நீர் விரதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதிகப்படியான நச்சுகளை வெளியேற்ற நீர் உதவி செய்யும்.
  • உங்கள் செல்கள் சாதாரணமாக செயல்படத் தொடங்கும். இதன் விளைவாக, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படத் தொடங்கும்.

நீர் எடுத்துக் கொள்ள வேண்டிய முறை

  • பிரத்தியேக நீர் விரதம் மற்றும் உணவுக்கு பிந்தைய விரதம் என இருவகைகள் இருக்கிறது.
  • அதில் பிரத்தியேக நீர் விரதத்தில் நீங்கள் நீர் மட்டும்தான் குடிக்க வேண்டும், 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை இதை செய்ய வேண்டும்.
  • உணவுக்கு பிந்தைய விரதத்தில் 1 முதல் 3 நாட்கள் வரை இதனை கடைபிடிக்கணும்.
  • பிரத்தியேக நீர் விரதம்
  • இந்த விரதத்தில் நீங்கள் நீர் மட்டுமே குடிக்க வேண்டும். பழச்சாறுகள், தேநீர், மதுபானம் போன்றவை அருந்தக்கூடாது.
  • நாள் முழுவதும் தண்ணீர் மட்டும்தான் குடிக்கணும்.
  • நீங்கள் உண்ணாவிரதத்தில் புதியவர் என்றால், 4 மணி நேரம் உணவு இல்லாமல் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.
  • காலை 8 மணிக்கு ஒரு காலை உணவை உட்கொண்டு, மதியம் 12 மணிக்கு உங்கள் விரதத்தை முடிக்கணும்.
  • உண்ணாவிரத காலத்தை படிப்படியாக 8 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்.
  • நாளடைவில் இதனை 24 மணி நேரமாக அதிகரிக்கவும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்யலாம்.
  • நீங்கள் உண்ணாவிரதத்தை முறித்தவுடன் அதிக அளவில் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
  • சில உலர் பழங்களுடன் உங்கள் விரதத்தை முறித்துக் கொள்ள வேண்டும்.
  • ஆரோக்கியமான பழச்சாறுகள் அல்லது பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தசை இழப்பை நிரப்பவும், வலிமையை மேம்படுத்தவும் உங்கள் உணவில் முழு தானியங்கள் மற்றும் புரதத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை மீட்டெடுக்க உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் மற்றும் விதைகளின் கலவையை உட்கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்