சர்க்கரை நோயாளிகள் தினமும் பாதாம் சாப்பிடலாமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்கள் உதவி செய்யும். அதில் ஒன்று தான் பாதாம் பருப்பு.

பாதாமில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது ஒவ்வொருவரது டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப் பொருள்.

ஆனால் இந்த அற்புதமான பாதாம் சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவி செய்வதோடு இல்லாமல், சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடும்.

சர்க்கரை நோயாளி பாதாமை சாப்பிடலாமா? பாதாமை எப்போது எப்படி சாப்பிட்டால் நல்லதுன்னு இப்போ பார்ப்போம்

  • பாதாமை சர்க்கரை நோயாளிகள் அதிகாலை அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வரலாம்.
  • பாதாமில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் பாதாமை சேர்ப்பதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
  • இதனால் உடல் பருமனாவதைத் தடுத்து விடலாம். ஒரு சர்க்கரை நோயாளி சாதாரண அளவு கலோரிகளை எடுத்து வந்து, பாதாமையும் அன்றாடம் உட்கொண்டால், அது அவர்களது மொத்த கலோரியின் அளவை அதிகப்படுத்தி காட்டி விடும்.
  • எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க பாதாமை உட்கொள்வதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளை உண்பதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
  • சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் கலோரியில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பாதாமை உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைத்து விடும்.
  • சாதாரணமாக ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிட்டு வரலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் இன்னும் அதிகமாக சாப்பிட்டு வரலாம். ஆனால் பொதுவாக ஒருவரால் ஒட்டுமொத்த கலோரியின் அளவைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். எனவே ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிடுவதே பாதுகாப்பு தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்