வழக்கமா சாப்பிடும் இந்த உணவுகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்! எச்சரிக்கையாக இருங்க....

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது.

5 முதல் 10 சதவீத மார்பக புற்றுநோயானது ஒரு குடும்பத்தின் தலைமுறை வழியாக மரபணு மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றன.

மேலும் மது பழக்கம், புகைப்பிடிப்பது, ஈஸ்ட்ரோஜென் வெளிப்பாடு மற்றும் குறிப்பிட்ட சில உணவுகள் போன்றவைகளும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் சில உணவுகளை தவிர்ப்பது சிறந்ததாகும்.

அந்தவகையில் அந்த உணவுகள் என்னெ்னன என்பதை பற்றி பார்ப்போம்.

 • ஆல்கஹால் செல்களில் உள்ள டி.என்.ஏ-வை சேதப்படுத்தி, அதனால் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே மதுவை அளவாக அருந்துங்கள். முடிந்தால் மதுப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.

  • உயர் கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய நோய், சர்க்கரை நோயின் அபாயத்துடன் தொடர்புடையவை. நீங்கள் ஆரோக்கியமாக வாழ நினைத்தால், கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் அதிகம் சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

  • எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட் கொண்டால், அது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கம். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடர்ச்சியாக சாப்பிடும் பழக்கத்தைக் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகம் இருக்கும்.

  • அதிகப்படியான சர்க்கரை எடுப்பது உடல் பருமனை உண்டாக்கும். உடல் பருமன் அதிகரித்தால், அது பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

  • வெள்ளை பிரட், சர்க்கரை நிறைந்த பேக்கரி உணவுகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவர்ப்பது நல்லது. ஏனெனில் புற்றுநோய்களான வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவேமுழு தானிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

  மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்