கர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Report Print Nalini in ஆரோக்கியம்

மருத்துவ குணங்களுக்காகவும் புளி பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. கர்ப்பகாலத்தில் பெண்களை வாட்டும் குமட்டல் மற்றும் காலை நேர சோர்வுக்கு இதன் புளிப்பு சுவை மிகுந்த சிறந்த தீர்வாக உள்ளது.

ஆனால், புளி அதிகம் சாப்பிடுவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம். புளிப்பு சுவை நமது சுவை மொட்டுக்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவது சில நன்மைகளை அளிக்கும். அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது புளியின் நன்மைகள் அனைத்தும் தீமைகளாக மாறிவிடும்.

புளி கர்ப்பகாலத்தில் அதிகமாக சாப்பிடலாமா என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்

வைட்டமின் சி

  • புளி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாக உள்ளது. ஆனால் அதிகளவு வைட்டமின் சி கர்ப்பிணிகளுக்கு கெடுதலை விளைவிக்கும். கர்ப்பிணி பெண்கள் அதிகளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்வது கருச்சிதைவுக்கு வழிவகுத்து விடும். சில ஆய்வுகளின் படி அதிகளவு வைட்டமின் சி குறைபிரசவத்திற்க்கு வழிவகுத்து விடுகிறது என்பது தெரியவந்துள்ளது.

மலமிளக்கி

  • புளி ஒரு மிதமான மலமிளக்கியாக செயல்படும். இது மலச்சிக்கலை போக்க உதவி செய்யும் இது கர்ப்ப காலத்தில் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இருப்பினும், அதிகப்படியான புளி மற்றும் அதன் மூலம் அதிகப்படியான மலமிளக்கியை உட்கொள்வது கடுமையான வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து பற்றாக்குறை, கருப்பையில் சுருக்கங்கள், குறைப்பிரசவம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

ஆஸ்பிரின்

  • புளி ஆஸ்பிரினுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றன. எனவே கர்ப்ப காலத்தில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்பவர்கள் புளியை பயன்படுத்தும். ஏனெனில் புளி பொதுவாக உடலில் ஆஸ்பிரின் உறிஞ்சுதலை அதிகரித்து விடும். ஆஸ்பிரின் அளவு அதிகரிப்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆஸ்பிரின் அளவு அதிகரித்து கருச்சிதைவு, தாமதமான பிரசவம், குழந்தைகளுக்கு நுரையீரல் மற்றும் இதயக் கோளாறுகளை உண்டாக்கி விடும்.

இப்யூபுரூஃபன்

  • ஆஸ்பிரின் போலவே, புளி சாப்பிடுவது இப்யூபுரூஃபன் உறிஞ்சுதலையும் அதிகரிக்குமாம். இந்த புளி இப்யூபுரூஃபன் தொடர்பு தீங்கு விளைவிக்கும். மூன்றாவது செமஸ்டரில் இப்யூபுரூஃபன் ஒரு வகை டி மருந்தாக பயன்படுத்தப்படும். அதாவது மூன்றாவது மூன்று மாதங்களில் இப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்வது கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இருக்கின்றன. இதனால் குழந்தையின் இதயம் மற்றும் நுரையீரல் பெரிதும் பாதிக்கும். பிரசவத்திலும் பல சிக்கலை ஏற்படுத்திவிடும்.

செரிமானம்

  • புளி அதிக அளவில் உட்கொள்வது பாதுகாப்பற்றது என்றாலும், மிதமான அளவில் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்துமாம். இது பித்த கோளாறுகள் மற்றும் வயிற்றுப்போக்குக்கு இயற்கையான சிகிச்சைப் பொருளாக இருக்கிறது, இது பசியையும் அதிகரிக்கிறது.

நீரிழிவு

  • கர்ப்பிணிப் பெண்களிடையே கர்ப்பகால நீரிழிவு ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. எனவே, இந்த பெண்களுக்கு புளி இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவதால் உதவியாக இருக்குமாம்.

கர்ப்ப காலத்தில் பெண் ஃவுளூரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் புளி எடுத்துக்கொள்வது கருவுக்கு தீங்கு விளைவித்து விடும். உடலில் இருக்கும் புளோரைடு அயனிகளை அகற்ற புளி ஊறவைத்த நீர் உதவி செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்