செரிமான பிரச்சினையால் அவதிப்படுறீங்களா? இந்த 5 உணவுகளையும் காலையில் எடுத்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
421Shares

வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம், வாயுத் தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு இவையெல்லாம் இன்றைக்கு சர்வ சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படும் பிரச்னைகள்.

இவை ஏற்படுவதற்கான அடிப்படையான, மிக முக்கியமான காரணம், செரிமானக் கோளாறு ஆகும்..

நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றை ஆரம்பத்திலே பார்த்து சரி செய்வது அவசியமாகும். இல்லாவிடின் பின்னடைவில் பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்த சில எளிய உணவுகளை நம் உணவில் சேர்க்கலாம். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • ஆரோக்கியமான செரிமானத்திற்கு பப்பாளி சிறந்த உணவாகும். இதில் உள்ள பப்பைன் எனப்படும் என்சைம், செரிமான செயல்பாட்டை நாள் முழுவதும் ஊக்கவிக்கிறது.

  • ஆப்பிளில் அடங்கியுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்கி ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.

  • வெள்ளரி ஒழுங்கான செரிமானத்திற்கு உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, இரைப்பை அழற்சி, செரிமானக்குழாயில் உள்ளப் புண்கள் போன்றவற்றை நீக்கும் பன்மடங்கு அற்புதத் தன்மையைக் கொண்டுள்ளது.

  • வாழைப்பழம் நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே ஒரு வாழைப்பழத்தை காலை உணவில் சேர்த்துக்கொண்டால் மனநிறைவைத் தரும்.

  • வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சையைக் கலந்து அருந்தினால், அது செரிமானத்தையும் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்க வல்லது. அதிகாலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்தினால் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து எடைக்குறைப்பிற்கு வழிவகுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்