தினமும் க்ரீன் டீயில் இந்த ஒரு பொருளை சேர்த்து குடிச்சு பாருங்க.... உடலில் நம்ப முடியாத அதிசயம் நிகழுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பலரும் உடல் எடையை குறைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மக்களிடையே பிரபலமான ஓர் பானம் தான் க்ரீன் டீ. இந்த டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.

ஆனால் க்ரீன் டீயின் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். ஆனால் இந்த டீயின் சுவையை அதிகரிக்க அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம்.

இதனால் இந்த டீயினால் கிடைக்கும் நன்மைகள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

oversixty
 • க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் போது, அது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் உடலுக்கு எளிதில் நன்மை கிடைக்கச் செய்கிறது.
 • செரிமான பிரச்சனையை சந்திப்பவர்கள், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பது மிகவும் நல்லது.
 • க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, சர்க்கரை நோயால் சிறுநீரகங்கள் சேதமடைவது குறைகிறது. மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைக்கிறது.
 • க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, உடலில் உள்ள கொழுப்புச் செல்களை எரிக்கும் திறன் இன்னும் அதிகரிக்கும் மற்றும் உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.
 • க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் போது, சுவை அற்புதமாக இருக்கும். பொதுவாக எலுமிச்சையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய லெமோனைன் பைட்டோகெமிக்கல் அடங்கியுள்ளது. இந்த பானம், நச்சுக்கள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதப்படுவதைத் தடுத்து பாதுகாக்கின்றன.
 • க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, அது உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்குவதுடன், மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு முக்கிய காரணமான மூட்டுகளில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
 • நீங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இதனால் இந்த பானத்தில் உள்ள எலுமிச்சை சிறுநீரின் வழியே உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.
 • ஒருவர் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், கல்லீரல் செல்கள் சேதமடைவது தடுக்கப்பட்டு, புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
 • க்ரீன் டீ ஒரு நாளைக்கு சுமார் 70 கலோரிகளை கூடுதலாக எரிக்கிறது. முழு நன்மைகளைப் பெற நினைத்தால், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள். இது இரட்டிப்பு நன்மைகளைப் பெற உதவி புரியும்.
 • எலுமிச்சையில் க்ரீன் டீயை ஒன்றாக குடிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, சளி, இருமல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு, விரைவில் குணமடைய உதவுகிறது.
 • நாள்பட்ட கொலஸ்ட்ரால் அல்லது இதய பிரச்சனையைக் கொண்டவர்கள், தினமும் எலுமிச்சை கலந்த க்ரீன் டீயை குடிப்பது நல்லது.
 • க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுத்திடுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்