தொண்டை கரகரன்னு இருக்கா? இதனை தீர்க்க இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை குடிச்சு பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
928Shares

தொண்டை கரகப்பு என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சனை தான். இது ஒரு வாரம் நீடிப்பதே அதிகம். அதற்குள் சரியாகி விடும்.

ஒரு வேலை உங்களுக்கு தொண்டை கரகரப்பு நெடுநாட்கள் நீடித்து வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

ஏனெனில், தொண்டை கரகரப்புப் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறி என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை தொண்டை கரகரப்பை சரி செய்ய சில இயற்கை முறைகள் உள்ளன. இவற்றை வீட்டில் இருக்கு எளிய பொருட்கள் கொண்டே சரி செய்யமுடியும்.

அந்தவகையில் தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து கால் டீஸ்பூன் அளவு அதிமதுரப்பொடியை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு அதில் தேவையெனில் இனிப்புக்கு தேன் சேர்த்து இளஞ்சூட்டோடு தொண்டையில் படும் படி குடித்துவந்தால் பலன் உடனடியாக கிடைக்கும்.

  • தொண்டை கரகரப்பு இருக்கும் போது காபி டீ தவிர்த்து பாலை சூடாக்கி அதில் சிட்டிகை மஞ்சளையும், சிட்டிகை மிளகுத்தூளையும் சேர்த்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக குடிக்க வேண்டும். தினமும் மூன்று முறை கூட குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இவை ஏற்றது.

  • ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து, ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி சேர்க்கவும். இஞ்சியும் நீரும் சேர்ந்து நன்றாக கொதித்து அரை டம்ளர் அளவுக்கு வந்ததும் இறக்கி நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பால் கலக்காமல் குடிக்க வேண்டும். இளஞ்சூடு தொண்டையில் நனைய வேண்டும் அப்படி நனைந்தாலே தொண்டை கரகரப்புக்கு விடுதலை தான்.

  • ஒரு டம்ளர் நீரை சூடு செய்து கெமோமில் மலர்களை சேர்த்து கொதிக்க வைத்தால் மலரின் நறுமணத்தை உணர முடியும். பிறகு இனிப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து நிறம் மாறியதும் வடிகட்டி குடிக்க வேண்டும். தேவையெனில் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

  • ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சையை பிழிந்து இனிப்புக்கு தேன் கலந்து இளஞ்சூடாக இருக்கும் போதே தொண்டையில் படும்படி நிதானமாக விழுங்க வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை இதை எடுத்துகொள்ளலாம். இனிப்புக்கு மாற்றாக உப்பும் சேர்க்கலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தாலே பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்