உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் புற்றுநோய் தான் .
புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்று வந்தால், புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.
இதனை தடுக்க சில உணவுமுறைகளை பின்பற்றினாலே போது இதிலிருந்து விடுபடலாம்.
அப்படியான சக்தி வாய்ந்த பொருள்கள் நம் இல்லத்திலேயே சமையலறையில் நிறைந்திருக்கிறது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

- மஞ்சள் புற்று செல்லை தடுக்கும் தன்மை கொண்டவை இவை உடலில் செல்களில் வீக்கம், அழற்சி ஏற்படாமல் தடுக்கும் குணத்தை கொண்டது. எனவே தினமும் மஞ்சளை பயன்படுத்தும் போது அவை புற்றுசெல் உருவாகும் தன்மையைக் குறைக்கிறது.
- இஞ்சியை சேர்த்து வந்தால் புற்றுநோய் அபாயம் குறையும். குறிப்பாக குடல் புற்றுநோய், ஆசன வாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்ததாக இஞ்சி சொல்லப்படுகிறது. உணவில் அடிக்கடி இஞ்சி சேர்ப்பதன் மூலம் புற்றுநோய் தடுக்கப்பட பெருமளவு வாய்ப்புண்டு. இஞ்சியை பயன்படுத்தும் போது மட்டும் தோல் சீவி பயன்படுத்த வேண்டும்.
- ரத்த புற்றுசெல்களை அழிக்க பூண்டு உதவுகிறது. மேலும் புற்று செல்களை ஆரம்பத்தில் அழிக்க உதவுகிறது. எனவே தினமும் பூண்டை உணவில் சேர்ப்பது அவசியம். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால் முழு பலனையும் பெற முடியும்.
- இலவங்கபட்டை புற்றுநோயில் தோல் புற்றுநோயை வராமல் தவிர்க்கும். நுரையீரல் புற்றுநோயையும் தடுக்கும் வகையில் செயல்படக்கூடியது. மேலும் மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், பாஸ்டேட் புற்றுநோய் போன்ற அபாயகரமான புற்றூநோயையும் தடுக்க உதவும்.
- சீரகம் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இவை புற்றுநோய் உருவாவதை ஊக்குவிக்கும் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சீரகத்தை உணவில் சேர்ப்பதொடு நீரில்கொதிக்கவைத்து குடித்தாலும் கூட போதுமானது.