சொத்தை பல் வலியால் பெரிதும் அவதியா? அதை தவிர்க்க இதோ சில வழிகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
1165Shares

பொதுவாக சொத்தை பற்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்ட பின்பும் வாயை நீரினால் கொப்பளிக்காமல் இருப்பது.

இதன் காரணமாக பாக்டீரியாக்கள் சேர்ந்து சொத்தை பற்களை ஏற்படுத்திவிடுகிறது.

இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

இதனை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் என்னெ்ன என்பதை பற்றி காண்போம்.

  • கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். ஒருவேளை வலி மிகவும் கடுமையாக இருந்தால், கிராம்பு எண்ணெயை வலியுள்ள பல்லின் மீது நேரடியாக தடவுங்கள்.

  • ஒரு டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இதனால் சொத்தை பற்களால் வலி ஏற்படுவது தடுக்கப்படும்.

  • சிறிது பூண்டு பற்களை தட்டி, அதில் சிறிது கல் உப்பை சேர்த்து கலந்து, வலியுள்ள பல்லின் மீது வைக்க வேண்டும். இதனால் சொத்தைப் பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  • மஞ்சள் பொடியை நேரடியாக பாதிக்கப்பட்ட பல்லின் மீது தடவி சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடியை கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்