பொதுவாக வயது வந்தவர்களுக்கு மட்டுமின்றி வயதானவர்களுக்கு வாயு பிரச்சனை என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய தொல்லைகளுள் ஒன்று.
குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட மக்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.
இதை நீங்கள் சரியான விதத்தில் கையாண்டால் இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இந்த காலத்தில் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவது கூட உங்களுக்கு பிரச்சினையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
எனவே வயதான காலத்தில் அஜீரணத்தை நிர்வகிக்க சில எளிய வழிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- ஒவ்வொரு உணவின் பகுதியையும் குறைக்க முற்பட வேண்டும். உதாரணமாக மூன்று வேளை சாப்பிடுவதை 4 அல்லது 5 வேளையாக கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு உணவை எளிதாக சீரணிக்க உதவி செய்யும்.
- அதிக எண்ணெய் மற்றும் மசாலாக்கள் கொண்ட உணவுகள் உங்களுக்கு சீரணிக்க கடினமாக அமையும். எனவே அந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள்.
- அஜீரண பிரச்சனை இருந்தால் மசாலாக்கள், வறுத்த உணவுகள், பீட்ஸாக்கள் அல்லது பன்றி இறைச்சி அல்லது ஆட்டிறைச்சி போன்றவற்றை தவிருங்கள்.
- முடிந்த வரை மிதமான அளவில் உப்பையும் போதுமான அளவு தண்ணீரையும் குடித்து வாருங்கள்.