எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் அடங்கி ஒடுங்கும் அற்புத மூலிகை தண்ணீர்! தினமும் குடித்து வாருங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
1182Shares

உலகம் முழுக்க ஆஸ்துமாவால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள்.

மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கிப் பிடித்தல், நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளுடன் தோன்றும்.

ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது என்ற போதிலும், தடுக்க வழிமுறைகள் உள்ளன. அதிலும் ஆஸ்துமா நோயாளிகள் இயற்கை உணவுகள், மூலிகை பொருட்களை எடுப்பது சிறந்தது ஆகும்.

அந்தவகையில ஆஸ்துமாவை குணப்படுத்தம் ஓர் அற்புத மூலிகை பானம் ஒன்று உள்ளது. தற்போது அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • ஆடாதோடை - பொடி 50 கிராம் ( இலையாக கிடைத்தால் ஒரு கைப்பிடி)
  • தூதுவளை - பொடி 50 கிராம் (
  • கற்பூரவல்லி - ஒரு கைப்பிடி அளவு இலை
  • வேப்பிலை - கொழுந்தாக அரை கைப்பிடி அளவு
  • எலுமிச்சை இலை- ஒரு கைப்பிடி அளவு
  • நஞ்சறுப்பான் - பொடி 50 கிராம்
  • சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் - தலா 30 கிராம்

தயாரிக்கும் முறை

முதலில் மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் நிழலில் உலர்த்தி கொள்ளவும்.

அனைத்தையும் சேர்த்து ஒன்றாக பொடியாக அரைத்து சலித்து கண்ணாடி பாட்டிலில் வைக்க வேண்டும்.

இதை 3 முதல் 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். இவை பக்கவிளைவில்லாதது என்பதால் எல்லா காலங்களிலும் இதை எடுத்துகொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் பிரச்சனை தலை தூக்கும் போதேல்லாம் காலையும், மாலையும் உணவுக்கு முன்பு இதை குடித்துவந்தால் போதும். பிரச்சனை தீவிரமாகாமல் பார்த்துகொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ஆஸ்துமாவின் தொடக்க காலமாக இருந்தால் தினமும் இந்த நீரை குடித்துவந்தால் ஆஸ்துமா பெருமளவு கட்டுப்பட்டுவிடும்.

மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் தொடக்க காலத்துக்கு முன்பிருந்தே குடித்துவந்தால் ஆஸ்துமா இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்