எண்ணற்ற நன்மைகளை தரும் ஊதாநிற முட்டைகோஸ்

Report Print Nalini in ஆரோக்கியம்

ஊதா முட்டைகோஸ் அல்லது சிவப்பு முட்டைகோஸ் இதுவும் ப்ரோக்கோலி, காலே, காலிப்ளவர் குடும்பத்தை சார்ந்தது.

சாதாரண முட்டைகோஸை விட இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், குறைந்தளவு கலோரிகளும் இருப்பதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

முட்டைக்கோஸின் இருண்ட நிறமி அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகளைக் குறிக்கும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது.

சிவப்பு முட்டைகோஸின் எண்ணற்ற பலன்கள்

உடல் எடை குறைப்பு

முட்டைகோஸ் பெரும்பாலும் உடல் எடை குறைக்கச் செய்யும். இந்த சிவப்பு முட்டைகோஸை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் குறைய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சிவப்பு முட்டைகோஸில் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. இதனால் உடலின் பல செயல்பாடுகளுக்கும் விட்டமின் சி பெரிதளவில் உதவி செய்கிறது. விட்டமின் சி அதிகம் இருப்பதால் முட்டைகோஸ் உடல் செயல்பாட்டிற்கு பெரிதளவு உதவி செய்கின்றன. மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றன.

செரிமானத்தை சரி செய்கிறது

சிவப்பு முட்டைகோஸில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. நார்சத்து நமது அஜீரண கோளாறுகளை கலைந்து எடுத்து வயிற்று கோளாறுகளை சுத்தம் செய்யும். நார்சத்து அதிகமாக உள்ளதால் வயிற்றுப் பகுதி மற்றும் குடல் பகுதிக்கு நன்மை விளைவிக்கும்.

கிருமிநாசினி

தினமும் நம் உணவில் முட்டைக்கோஸ் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய அனைத்து பாக்டீரியாக்களை முட்டைகோஸ் அழித்து விடும்.

தீங்கு விளைவிக்கக்கூடிய காரணியான யூரிக் ஆசிட் போன்ற விஷயங்களை உடம்பிலிருந்து முட்டைகோஸ் எடுத்துவிடும்.

மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல்களையும் உடலிலிருந்து சுத்தம் செய்யும் வேலையை முட்டைகோஸ் மிகவும் சிறப்பாக செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்