மாரடைப்பு வராமல் தடுக்கணுமா? இந்த எளிமையான 4 பழக்கங்களை வாழ்க்கை முறையோடு சேர்த்துகோங்க

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 17 மில்லியன் மக்கள் இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அதில் 3 மில்லியல் மக்கள் மாரடைப்பால் இறக்கின்றனர்.

வயது வித்தியாசமின்றி வரும் மாரடைப்பை தடுக்க நமது வாழ்க்கை முறையில் சில பழக்கங்களை சேர்த்து கொண்டாலே போதுமானது.

உடற்பயிற்சி

தற்போதைய காலக்கட்டத்தில் உட்கார்ந்த இடத்திலேயே கணினி முன்னால் பலரும் வேலை செய்வதால் உடல் உழைப்பு என்பதே கேள்விகுறியாகிவிட்டது.

ஆரோக்கியமான உடலுக்கு ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். இதற்கு உடற்பயிற்சிதான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நடைபயிற்சி கூட செய்யலாம்.

உணவு முறைகள்

புரதச்சத்து நிறைந்த உணவுகள். பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானிய வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிறுங்கள். ஆய்விலும் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை தவிர்த்தாலே இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர்.

புகைபிடிப்பது

புகைப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் இந்த புகைப்பழக்கம் இரத்த ஓட்டத்தை உறைய வைக்கும். எனவே இதயம் இரத்த ஓட்டமின்றி இயங்கும்போது மாரடைப்பு உண்டாகும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்திவிடுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம் இதயத்திற்கான அழுத்தத்தையும் அதிகரிக்கும். அது இதயத்திற்கு முற்றிலும் நல்லதல்ல. தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சில பிரச்னைகளால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தம். இதற்கு, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதே சரியானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்