முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறைய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Report Print Nalini in ஆரோக்கியம்

சிலருக்கு இளம் வயதிலும், சிலருக்கு வயதான பிறகும் முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றில் இளம் வயதில் சுருக்கம் வருவது என்பது ஒருவரது வாழ்வில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஒருவர் கோபப்படும் போது, ஆச்சரியப்படும் போது, வலி ஏற்படும் போது கூட நெற்றியில் சுருக்கம் ஏற்படும்.

சுருக்கம் என்பது மூன்று வகைப்படும். முதல் சுருக்கம் என்பது, கண்களின் ஓரங்களில் ஏற்படக்கூடியது. இரண்டாவது, முகத்தில் தோன்றகூடியது. அடிக்கடி ஒரே மாதிரியான முக பாவனையை செய்வதன் மூலம் இது ஏற்படக்கூடும்.

பாதிப்படைந்த சருமம், புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது சூரியனின் புறஊதாக்கதிர்களின் தாக்கம் போன்வற்றால் கூட முகத்தில் சுருக்கம் தோன்றலாம். கடைசி வகை சுருக்கமானது, கழுத்து பகுதியில் வரக்கூடியது. வயதாவதினால் ஏற்படக்கூடிய பிரச்சனை இது. பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும்.

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணலாம். இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் சாப்பிடுவது தான் காரணம்.

இந்த பிரச்சினைகளை சரிசெய்ய சாப்பிட வேண்டிய உணவுகள்

 • காய்கறி பழ வகைகளைத் அன்றாடம் சாப்பிட வேண்டும்.
 • வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் முக சுருக்கங்கள் மறையும்.
 • துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும்.
 • வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட வேண்டும்.
 • நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவலாம்.
 • கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
 • தினமும் 2 லிட்டர் மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • தினமும் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை தவறாமல் கழித்து விட வேண்டும்.
 • அதிகளவில் சிகரெட் பிடிக்கக்கூடாது.
 • முகத்தின் சருமம், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்