இரவு எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?

Report Print Raju Raju in ஆரோக்கியம்

இரவில் தூங்க செல்லும் முன்னர் அதிகமாக உணவு சாப்பிடக்கூடாது என கூறப்படுவதுண்டு.

இதற்காகவே பலரும் மிகவும் குறைவான அளவில் உணவுகளை சாப்பிடுவார்கள் அல்லது உணவே சாப்பிடாமல் தூங்க செல்வர்.

இப்படி உண்ணாமல் உறங்குவதால் உடலுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என்பது தெரியுமா?

ஊட்டச்சத்து குறைபாடுகள்

இரவில் உணவு உண்ணாமல் தூங்க சென்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதாவது உடலுக்கு தேவையான மெக்னீசியம், விட்டமின் B12 மற்றும் விட்டமின் D3 கிடைக்காமல் போய்விடும்.

தூங்குவதில் சிரமம்

எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. பசியால் வயிறு கிள்ளும். நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படும்

இரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும். இது போல பலவிதமான பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்