விரல்களுக்கு பயிற்சி கொடுத்தால் என்னென்ன பிரச்சினை சரியாகும்ன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

நமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில் இருக்கும் ரேகைகள் நமது எதிர்காலத்தை பற்றி கூறும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நமது கைகளில் இருக்கும் ரேகைகள் மட்டுமல்ல நமது கையின் அமைப்பும், வடிவமும் கூட நம்மை பற்றியும், நமது எதிர்காலம் பற்றியும் கூறக்கூடும். கைகளின் அமைப்புகளில் பலவகைகள் உள்ளது.

உள்ளங்கை மற்றும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும் பயிற்சிகள் பண்டையக் காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஆனால், காலப்போக்கில் இது மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இது ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு பழமையான மருத்துவ முறையாகும்.

உடலில் உள்ள உறுப்புக்கும், விரலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதையும், எந்தெந்த விரல்களுக்கு என்னென்ன பயிற்சி கொடுத்தால் எந்தெந்த உறுப்புகள் பலம் பெறும் என்பதைப் பற்றி பார்ப்போம்

கட்டை விரல்

கட்டை விரலுக்கும், மண்ணீரல் மற்றும் வயிறு பகுதிகளுக்கும் ஒரு இணைப்பு உள்ளது. உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்து வந்தால், உங்களுக்கு மன அழுத்தம் குறையும். இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கத்தை நாம் பெறலாம். கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதன் மூலம் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்கும்.

ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரலுக்கும், சிறுநீரகம் மற்றும்ம சிறுநீர்ப்பைக்கு இணைப்பு உள்ளது. ஆள்காட்டி விரல் ஒருவருடைய பலவீனத்தையும், பயத்தையையும் குறிக்கும் விரலாகும். ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

நடுவிரல்

நடுவிரக்கும் கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கும் இணைப்பு உள்ளது. நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதுதன் மூலம் ஒருவருடைய கோபத்தை குறைக்க முடியும். மேலும் தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலியை போக்கும்.

மோதிரவிரல்

மோதிர விரலுக்கும், நுரையீரலுக்கும்ம இணைப்பு உள்ளது. ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரல். மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதன் மூலம் சுவாசக் கோளாறுகளை போக்கலாம். மேலும், நரம்பு மண்டலமும், தசையும் வலிமை பெறும்.

சிறுவிரல்

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதன் மூலம் இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்ம. மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்தும். இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை

உள்ளங்கைக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவி செய்யும். உங்களுடைய மனஅழுத்தத்தை போக்கி மன அமைதியை மேம்படுத்தும். இந்த பயிற்சி உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வை போக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்