ஒரு வாரம் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து பருகி வாருங்கள்....இந்த பிரச்சினை எல்லாம் பறந்துவிடுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
1203Shares

நாளாந்தம் உணவுப்பொருளாகப் பாவிக்கப்படும் ஒரு முக்கிய பொருளாக உப்பு உள்ளது.

உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது போல் மனித வாழ்வில் 'உப்பு' முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரை இரவு தூங்கும் முன் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.

 • உப்பு நீர் உடலுக்கு தேவையான நீரேற்றத்திற்கு உதவி புரிந்து, உடல் வறட்சியைத் தடுக்கிறது. எனவே உடல் வறட்சியடையாமல் இருக்க அதிக நீரைக் குடிக்க வேண்டியது அவசியம்.

 • வெதுவெதுப்பான உப்பு நீரில் உடலுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, நோய்த்தொற்றுக்கள் உடலைத் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்கவும் செய்யும்.

 • ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடித்து வந்தால் செரிமான இயக்கம் மேம்படும். செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தால், அடிக்கடி சந்திக்கும் செரிமான பிரச்சனைகளான அஜீரண கோளாறு, மலச்சிக்கல், உப்புசம் போன்றவை தடுக்கப்படும்.

 • உடல் வளர்சிதை மாற்ற முறையை வழங்குவதற்கு உப்பு நீர் உதவி புரியும். எனவே, இது நாம் உண்ணும் உணவை உடலுக்கு தேவையான ஆற்றலாக திறம்பட மாற்றும்.

 • நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பின் இரவு நேரத்தில் உப்பு நீரைக் குடிக்கும் போது, அது மனதை அமைதியடையச் செய்வதோடு, புத்துணர்ச்சியையும் பெறச் செய்யும்.

 • இரவு நேரம் உப்பு நீரைக் குடித்து விட்டு தூங்கும் போது, மனதில் உள்ள அழுத்தம் குறைந்து, மனம் அமைதி பெற்று நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறச் செய்கிறது.

 • உப்பு கலந்த நீரைக் குடிக்கும் போது, அது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக உடலினுள் செயல்பட்டு, உடல் வலி மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்க செய்கிறது.

 • உப்பு நீர் மூட்டுக்களில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், வீக்கத்தையும் குறைக்கிறது. எனவே ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் உப்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.

 • உப்பு நீரைக் குடிக்கும் போது, அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுத்தமாக்கும். எனவே நீங்கள் உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், மாதம் ஒரு முறை ஒரு வாரத்திற்கு உப்பு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

 • உப்பு நீரைக் குடிக்கும் போது, அது சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சருமத்தை பிரகாசமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

 • உப்பில் உள்ள கனிமச்சத்து எலும்புகளின் நிலையை வலுவாக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, எலும்புகளை வலிமையாக்கும். முக்கியமாக இது முதுமைக் காலத்தில் சந்திக்கும் ஆஸ்டியோபோரோசிஸைத் தவிர்க்க உதவி புரியும்.

பக்க விளைவுகள்

 • அளவுக்கு அதிகமாக உப்பை நீரில் கலந்து விட வேண்டாம். அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பு நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 • ஒருவேளை உப்பு நீரால் குமட்டல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை அனுபவித்தால், உடனே உப்பு நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 • உப்பு காரணமாக கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், உப்பு நீர் குடிக்கக்கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்