பறவை காய்ச்சல் அறிகுறிகளும், பாதிப்புகளும் பற்றி தெரிந்து கொள்வோம்

Report Print Nalini in ஆரோக்கியம்

பறவை காய்ச்சல், மருத்துவ ரீதியாக ஏவியன் இன்புளுயன்சா என குறிப்பிடப்படுகிறது. இது மனிதர்களுக்கு அரிதாக ஏற்படக்கூடிய ஒரு தொற்று ஆகும்.

பெயருக்கேற்றாற்போல் இது பறவைகளில் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. இருப்பினும், அது மனிதர்களையும் பாதிக்கக்கூடியது.

நோய்த்தொற்றுடைய நபருக்கு பலதரப்பட்ட ஃப்ளு வைரஸ் தாக்கப்பட்டது போல் அறிகுறி காணப்படும் மற்றும் கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும்.

இந்தியாவில் பறவை காய்ச்சலால் நான்கு ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வைரஸ் நீர்க்கோழியிடமிருந்து வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்குத் தொற்றுகிறது. தொற்றுக்குள்ளான பறவைகளின் மலம் மற்றும் கண், மூக்கு பகுதிகளில் ஏற்படும் கசிவுகளின் மூலமாக மனிதர்களுக்குப் பரவுகிறது.

பச்சை முட்டை, அரைவேக்காடு முட்டை சாப்பிடுவதால் இக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உண்டு.

இந்திய கோழிகளில் பலமுறை இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மனிதர்களில் இந்த வைரஸ் காணப்படுவது இதுவே முதல்முறை என்று NIV விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காற்று, தூசி, தீவனம் , தண்ணீர் ஆகியவற்றின் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது என்று கூறப்படுகிறது.

நோய்த்தொற்று பாதிப்பிற்கு பிறகு கோழிகள் பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றினாலும், மனச்சோர்வு மற்றும் சிதைந்த இறகுகள் இதன் அறிகுறிகளாகும்.

இந்த வைரஸ் மூச்சுக்குழாயை பாதிக்கிறது. இதனால் கோழிகளுக்கு எஸ்கெரிச்சியா கோலி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு 10% கோழிகள் இறக்க நேரிடுகிறது. மோசமான காற்றோட்டம் இருக்கும்போது மூச்சுக்குழாய் எளிதில் சளியால் அடைக்கப்பட்டு கடுமையான சுவாச நோய் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

நோயின் அறிகுறி

 • தொண்டைப்புண் மற்றும் இருமல்
 • காய்ச்சல்
 • வயிற்றுப்போக்கு
 • தலைவலி
 • சுவாசத்தில் சிரமம்.
 • குமட்டல் மற்றும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

தடுப்பு முறைகள்

 • தொற்று இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, ஒருவேளை அப்பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தால் பறவைகள் இருக்கும் இடத்தின் அருகில் செல்லக்கூடாது.
 • பறவைகளைத் தொட்ட உடன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
 • பறவைகளின் இறைச்சி, முட்டைகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.
 • தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
 • நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், ஆழ்ந்து தூங்க வேண்டும்.

பறவைக் காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து

 • நிமோனியா வரும்
 • நுரையீரல் பாதிப்படையும்.
 • சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
 • இதய நோய்கள் வரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்