புளித்த ஏப்பத்தை தடுத்து நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க!

Report Print Nalini in ஆரோக்கியம்
850Shares

சாப்பிட்டு முடித்தப் பின் ஏப்பம் வருவதை திருப்தியாக சாப்பிடதன் அடையாளமாகத் தான் பலரும் கருதுகின்றனர். ஆனால், சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் ஏப்பம் வரும். இரைப்பையில் உள்ள காற்றுதான் ஏப்பமாக வருகிறது. இதுவே இந்த காற்றானது, குடலை அடைந்தால், வாய்வாக, மலவாயில் வழியாக வெளியேறும்.

வயிறு சம்மந்தமாக எந்தப் பிரச்சனைக்கும், தனக்கு அல்சர் இருக்கிறது என்று பொதுவாக நினைத்து விடுகிறார்கள். நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவினால், சாப்பிடும் முறையினாலும், உடற்பயிற்சி, ஆரோக்கியம் போன்றவற்றினாலும் வயிறு சம்மந்தமான அஜீரணம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் நெஞ்செரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் என்றது பெரும்பாலோனோருக்கு வரும் ஒன்றாகும்.

வாயை திறந்து கொண்டே சிரிப்பது, உணவு மற்றும் தண்ணீரை வேகமாக எடுத்து கொள்வது, வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அதிகம் எடுத்து கொள்வது போன்ற உணவு பழக்கங்கள் ஏப்பம் வருவதை அதிகரிக்கும்.

வெந்தயப் பொடி

வெந்தய பொடியை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஏப்பம் பிரச்சினை சரியாகும். வெந்தயக் கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வரலாம்.

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சை பழங்களை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக குடித்து வந்தால் இப்பிரச்சினை சரியாகும்.

மது அருந்துதல், புகை பிடித்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், அதிகக் காரம், தலைவலி ஏற்பட்டால் தலைவலி மாத்திரை ஆகியவற்றால் தசை பாதிக்கப்பட்டு இவை வரலாம். எனவே, மது, புகை இவற்றை தவிர்த்தல் நல்லது.

உணவு

புளித்த ஏப்பம் சரியாக பிரண்டை உப்பை தினமும் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றின் பக்க விளைவுகளாக ஏப்பம் வருரும். எனவே, புளித்த ஏப்பம் பிரச்சனை உள்ளவர்கள் அதிக காரமுள்ள உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.

குளிர்ச்சியான தண்ணீர்

தொடர்ச்சியாக வரும் ஏப்பத்தை குளிர்ச்சியான தண்ணீர் குடித்து வந்தால் ஏப்பம் வராமல் தடுக்கலாம். அடிக்கடி ஏப்பம் வரும் போது ஒரு கப் புதினா டீ குடித்தால் ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

ஏலக்காய் டீ

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்து வந்தால்செரிமான பிரச்சனை நீங்கி அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்று விடும்.ஒரு துண்டு இஞ்சியை மென்று வந்தாலோ அல்லது இஞ்சி குடித்து வந்தாலோதொடர்ந்து வரும் ஏப்பம் நின்று விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்