இந்த உணவுகள் கூட உங்களுக்கு தலைவலியை உண்டாக்குமாம்.. எச்சரிக்கையாக இருங்க!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளில் தலைவலியும் ஒன்றாகும்.

அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது.

இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் சில உணவுகள் கூட தலைவலியை ஏற்படுத்தும். அந்த உணவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • ஆல்கஹால் அருந்துவதும் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். தலை பாரமாக இருக்கும். மது உடலில் நீர்ச்சத்தை குறைப்பதால் தலைவலி உண்டாகும்.
  • சோடா மற்றும் கோக்ககோலா போன்ற குளிர்பானங்கள் செயற்கை இனிப்பு சுவை சேர்ப்பதால் தலைவலிக்குக் காரணமாக இருக்கின்றன.
  • உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் 2 துளி சோயா சாஸ் உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. இதனால் தலைவலி உண்டாகும்.
  • காற்று அடைபட்ட சிப்ச் வகைகள் தலைவலியை உண்டாக்கும். உருளைக்கிழங்கு போன்ற தாவர வகைகளில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால் அவை அமினோ ஆசிடை வெளியிடுகின்அன. அவை மோனோசோடியம் குளுடமேட் ஆக உருவாவதால் தலைவலி , வாந்தியை உண்டாக்கும்.
  • அவகடோவின் தைரமின் என்னும் வேதிப்பொருள் உள்ளதால் அவை இரத்த நாளங்களை சுருங்கி விரியச் செய்யும். அதன் காரணமாக தலைவலி உண்டாகும்.
  • ஊட்டச்சத்து மிக்க வாழைப்பழமும் சில நேரங்களில் தலைவலியை உண்டாக்கலாம்.
  • அவகடோவைப் போல் சீஸும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து விரிவுபடுத்தும். எனவே அதன் அழுத்தம் காரணமாக தலைவலி வரலாம்.
  • சுவிங்கம் மெல்லும் பழக்கம் இருந்தால் வாயின் அசைவு கழுத்து மற்றும் தலையின் தசை மற்றும் நரம்புகளை தொடர்ந்து இயங்கச் செய்யும். அதன் காரணமாகவும் தலைவலி இருக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்