உடம்பை சிக்குனு வைத்து கொள்ள வேண்டுமா? தினமும் ஒரு துண்டு அன்னாசியை சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
365Shares

அன்னாசிபழம் சுவையான இனிப்பு மற்றும் புளிப்பு சுவை சேர்ந்த பழமாகும்.

அன்னாசிபழத்தில் உள்ள விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உங்க மெட்டா பாலிசத்தை ஒழுங்குபடுத்துகிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.

இது ஒரு சிறந்த எடை இழப்பு உணவைத் தரும் பழமாகும். அன்னாசிப்பழத்தின் ஒரு துண்டில் 42 கலோரிகள் மட்டுமே உள்ளன.

எனவே டயட் இருப்பவர்கள் தங்கள் ப்ரூட் சாலட் தட்டில் அன்னாசிபழத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

அந்தவகையில் அன்னாசி எப்படி உடல் எடையை குறைக்கின்றது என பார்ப்போம்.

அன்னாசி எவ்வாறு உடல் எடையை குறைக்க உதவுகின்றது?

  • அன்னாசி பழத்தில் உள்ள புரோமலின் புரத செரிமானம் மற்றும் பயன்பாட்டிற்கு உதவுகிறது. இதனால் மெலிந்த உடல் நிறை பெற உதவுகிறது. இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.

  • அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலின் புரத மூலக்கூறுகளை உடைத்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. சரியான செரிமானம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது கூடுதல் கிலோவை இழக்க உதவும். மேலும், நல்ல செரிமானம் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

  • அன்னாசிப்பழத்தில் நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே உள்ளன. இது உங்கள் பசியை போக்கி நீண்ட நேரம் வயிறு நிரம்பிய முழுமையான உணர்வுடன் வைத்து இருக்கும். எனவே தேவையில்லாமல் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை இதன் மூலம் நீங்கள் குறைக்கலாம்.

  • அன்னாசிப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபைபர் மற்றும் நீர்ச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இது உங்களை ஒரே நேரத்தில் வயிறு நிரம்பிய உணர்வுடனும் மற்றும் நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அதிக அளவு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

  • அன்னாசிபழம் மாங்கனீஸால் நிரப்பப்பட்டு உள்ளதால் இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. எனவே இது எடை இழப்பை துரிதப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழ உதவுகிறது. எனவே தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் அன்னாசிபழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு

அன்னாசிபழம் சிலருக்கு அழற்சி யை உண்டாக்கலாம். எனவே ஒவ்வாமை அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசித்து கொள்ளுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்