உடலில் நீர்ச்சத்து குறைந்தால் ஏற்படும் பேராபத்துக்கள்!

Report Print Nalini in ஆரோக்கியம்

இந்த காலத்தில் ஏற்படும் முதல் பாதிப்பு உடலில் நீர் சத்து குறைவது தான். இதனை கொஞ்சம் கூட அலட்சியமாக விட்டு விடக்கூடாது. உடலில் 2/3 பங்கு நீர் சத்துதான். இதனால் தான் கண் அசைவுகள்.

மூட்டு அசைவுகள், ஜீரணம், நச்சுக்கள் வெளியேறுதல், சரும பாதுகாப்பு இப்படி நீர் சக்தியின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சர்க்கரை நோயாளிகள், தீக்காயம் பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கு நீர்சக்தி குறைய அதிக வாய்ப்பு உண்டு. இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மற்றவர்கள் கீழ்கண்ட அறிகுறிகளை அறிந்து கொண்டால் நீர் சக்தி குறைபாட்டிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

உடலில் இருந்து நீர் வெளிவருவது சாதாரணமான விஷயம் தான். நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, கண்களில் இருந்து கண்ணீர், இவ்வகையில் நீர் வெளியேறுகிறது.

சிலர் நீர் குறைபாட்டை சமப்படுத்த அடிக்கடி நீர் அருந்துவது, நீர் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது, எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது போன்ற பழக்கத்தை செய்வார்கள்.

இப்படி உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அதற்கேற்ப நீங்க தண்ணீர் அல்லது உணவு எடுத்துக்கொள்ள வில்லை என்றால் உடலில் நீர் வறட்சி அதிகமாக ஏற்பட்டு விடும்.

சருமம் 30 சதவீதம் நீரினைக் கொண்டது. சருமம் உருவாக்கும் எண்ணை நீர் வற்றுவதனைத் தவிர்க்கும். அடிக்கடி குளிப்பது, வறண்ட காற்று, உஷ்ணம், சரும கிருமி பாதிப்பு இவை சரும நீரினை வற்றச் செய்யலாம். இது சருமத்தினை வறட்சியானதாகவும், அரிப்பு டையதாகவும் ஆக்கும்.

மூட்டுகளில் உள்ள தசை நார்கள் 65-80 சதவீதம் நீர் நிறைந்தவை. உடலில் நீர் குறையும் பொழுது இங்கு உராய்வு ஏற்பட்டு வலியும் வீக்கமும் ஏற்படும்.

உடம்பில் சோடியம் அளவு குறைவாக உள்ள நபர்கள் தேவைப்படும் போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நாம் உடற்பயிற்சி செய்த பின் நாம் தண்ணீர் குடிப்பது மாதிரி ஹைப்போநெட்ரோமியா நோயாளிகளால் நிறைய தண்ணீர் குடிக்க முடியாது. அவர்களின் தாகத்திற்கு ஏற்ப மட்டுமே தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. இல்லையென்றால் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளதாம்.

அறிகுறிகள்:

 • அதிக தாகம் மற்றும் தொண்டை வறண்டு போவது
 • தலை வலி
 • சிறுநீர் மஞ்சளாக போவது
 • சிறுநீர் கழிப்பதில் குறைபாடு
 • சரும வறட்சி
 • சருமத்தில் வறட்சி காரணமாக வெடிப்புகள்
 • சிறுநீர் மஞ்சளாக போவது /சிறுநீர் கழிப்பதில் குறைபாடு
 • வேகமாக மூச்சு வாங்குவது
 • வேகமான இதயத்துடிப்பு
 • சன்மான கண்கள்
 • சத்து குறைபாடு, தூக்கமின்மை, எரிச்சல்
 • மயக்கம்

நம்மை பாதுகாத்துக் கொள்ள

 • பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே பாதுகாப்பு செய்வது நல்லது. அதிக தண்ணீர் குடிப்பது , நீர் சத்து அதிகம் உள்ள உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவை உடலுக்கு நீர்ச்சத்தை கொடுக்கும்.
 • வெயிலில் அதிகம் வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
 • முதியவர்களும், குழந்தைகளும் மிக ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.
 • சரியான அளவு நீர் உள்ளதா என்று அடிக்கடிக்கு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்