இனி உங்கள் உணவில் இவற்றை எல்லாம் சேர்த்து கொள்ளுஙகள்... புற்றுநோய் எட்டியே பார்க்கதாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும். இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.

புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதற்காக வாழ்நாள் முழுவது மாத்திரைகளை போட வேண்டும் அவசியமில்லை.

இதன் வீரியத்தை குறைக்க சில உணவுகள் உதவி புரிகின்றது. முற்றிலுமாக புற்றுநோய் அபாயத்தை குறைக்கா விட்டாலும் அது வராமல் தடுக்கவும், அதன் வீரியத்தை குறைக்கவும் உதவி செய்கிறது.

அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பூண்டை அதிகம் எடுத்து கொண்டவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் குறைவு. உணவில் தவறாமல் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இது வாயுத்தொல்லையை தீர்க்கும். ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கப் பயன்படுகிறது.

  • தக்காளியில் இயற்கையாகவே கேன்சரை தடுக்கும் சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த தக்காளி பழங்கள் டி. என். ஏ வில் ஏற்படும் செல் பிறழ்ச்சியை தடுத்து புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கிறது. எனவே இனி தக்காளி சாற்றை உங்கள் உணவில் சேர்த்து வரலாம்.

  • பிராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் அடங்கும். இந்த உணவில் உள்ள ஆன்டி கேன்சர் தன்மை புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.

  • க்ரீன் டீ புற்றுநோய் அபாயத்தை குறைப்பது தெரிய வந்துள்ளது. இந்த கேட்சின் புற்றுநோய் செல்களை சுருக்கி கட்டிகளின் வீரியத்தை குறைக்கிறது. க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்களும் புற்றுநோயை விரட்டுவதில் பங்களிக்கின்றன.

  • முழு தானியங்களில் நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற புற்றுநோயை எதிர்க்க கூடிய தன்மைகள் அடங்கியுள்ளன. இனி உணவில் ஓட்ஸ், பார்லி, பழுப்பு அரிசி, பாஸ்தா, கோதுமை ரொட்டி போன்ற முழு தானியங்களுக்கு இடம் கொடுங்கள்.

  • மஞ்சள் தூள் நம் இந்திய உணவுகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும் ஒன்று. இந்த மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது புற்றுநோயை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது மற்றும் புற்றுநோய் கட்டிகளை சுருக்குகிறது, புற்றுநோய் வீரியத்தை மெதுவாக்குகிறது.

  • கருப்பு திராட்சை பழங்களில் உள்ள முக்கியமான பொருள் ரிவர்ஸ்டெல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள். இந்த ரிவர்ஸ்டெல் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

  • பீன்ஸ் ஆன்டி ஆக்ஸிடன்களின் இருப்பிடம் எனலாம். அதிலும் சிவப்பு பீன்ஸில் ஏகப்பட்ட ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள் சேர்ந்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்