வெங்காயத் தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி கூட பயன்படுத்தலாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய உணவு பொருள் தான் வெங்காயம்.

இது பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியம் குறிப்புகளிலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது.

அதைபோல் தான் வெங்காய தோல்களில் கூட பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் , வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் இதயத்திற்கு நட்பான ஃபிளாவனாய்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனை வீணாக கீழே போடாமல் பயன்படுத்துவது நல்லது. அந்தவகையில் வெங்காய தோல் அளிக்கும் பயன்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

  • சூப் மற்றும் குழம்பில் கூடுதல் சுவையளிக்க வெங்காய தோலை சேர்க்கலாம். இது குழம்பை கெட்டியாக்க உதவி செய்யும். இது உங்க கிரேவிக்கு அழகான ஊதா நிறத்தை கொடுக்கும்.

  • சட்னி தாளிக்கும் போது கூட வெங்காயத்தின் தோலை உரிக்காமல் அப்படியே தாளிக்க பயன்படுத்தலாம். அதன் கருகிய தன்மை தேங்காய் சட்னிக்கு கூடுதல் சுவை அளிக்கும்.

  • தற்போது உணவுகளில் கருகிய தன்மை சேர்ப்பது வழக்கமாகி வருகிறது. இது உணவிற்கு ஒரு ஸ்மோக்கி தன்மையை கொடுக்கிறது. எனவே வெங்காய தோலை அடுப்பில் வைத்து கருக்கி அந்த சாம்பலை தூவி விடலாம்.

  • வெங்காய தோல் டீ உங்க மனதை அமைதிப்படுத்தவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தேயிலையை சேர்த்து டீ போடும் சமயத்தில் வெங்காய தோலையும் சேர்த்து சூடான நீரில் கொதிக்க விடுங்கள். பிறகு இந்த டீயை வடிகட்டி ஆரோக்கியமாக குடித்து வாருங்கள்.

  • வெங்காய தோல் சேர்க்கப்பட்ட நீர் உங்க அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும். நீடிக்கும் தசை பிடிப்புகளையும் இது சரியாகக் உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் வெங்காயத் தோல்களைச் சேர்த்து, குறைந்தது 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு தோல்களை அகற்றி விட்டு அந்த தண்ணீரை குடியுங்கள்.

  • பிரியாணி, புலாவ், வறுத்த அரிசி, ஜீரா அரிசி - கிட்டத்தட்ட எல்லா அரிசி உணவுகளுடனும் சில வெங்காயத் தோல்களை சேர்த்து சமைப்பதன் மூலம் சுவையை மேம்படுத்தலாம். இது சூப்பராக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்