மஞ்சள் அதிகமா சாப்பிட்டா என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
454Shares

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருள் தான் மஞ்சள்.

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும் . உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேத பாரம்பரிய சீன மருத்துவம் எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

மஞ்சளில் அதிக நன்மைகள் இருந்தாலும் இதனை அதிகமாக எடுத்து கொள்ளும்போது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் தற்போது மஞ்சளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

Google

  • அதிகப்படியான மஞ்சள் உட்கொள்வது உங்க உடலை வெப்பமாக்கும், இது உங்களுக்கு வயிற்று வீக்கத்தை உண்டாக்கும். வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பிற்கு வழி வகுக்கும்.

  • மஞ்சள் சிறுநீரக கற்களை உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் இது ஆக்ஸலேட்டுகளை கொண்டுள்ளது. கால்சியத்தை பிணைத்து கரையாத கால்சியம் ஆக்ஸலேட்டை உருவாக்குகின்றன. இது தான் சிறுநீரக கற்களுக்கு முதன்மையான காரணமாகும்.

  • மஞ்சளில் காணப்படும் குர்குமின் வயிற்று போக்கு, குமட்டல் போன்றவை ஏற்படலாம். அதிலும் வெந்நீரில் சேர்த்துக் குடிக்கின்ற பொழுது, அதில் உள்ள துவர்ப்புத் தன்மை குமட்டலை ஏற்படுத்தும்.

  • மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது உங்களுக்கு தடிப்புகள், வெடிப்புகள் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். இது சரும அழற்சி போன்றவற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

  • அதிகப்படியான மஞ்சள் நுகர்வு கொள்வது உங்களுக்கு இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கும். எனவே இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவில் மஞ்சளை குறைந்த அளவு மட்டுமே சேருங்கள். ஏனெனில் இது இரும்பை உறிஞ்சும் உடலின் திறனைக் குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்