இந்த உணவுகளெல்லாம் நோயெதிர்ப்பு ஆற்றலை குறைக்குமாம்.... உடனே நிறுத்துங்க.

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே.

அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், ஏற்கனவே பலவீனமாக இருப்பவர்கள் சற்று கூடுதலாக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு திறனானது இளம் வயதில் அதிகமாகவும் முதுமை வயதில் குறைவாகவும் இருக்கும்.

அதனை நாம் கட்டுப்படுத்துவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். இதற்கு சில உணவுகளை நாம் தவிர்ப்பது சிறந்தது.

அந்தவகையில் தற்போது நோயெதிர்ப்பு ஆற்றலை குறைக்கும் உணவுகளை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • அதிக உப்பு, காரம் மற்றும் இனிப்பு தன்மை கொண்ட அனைத்து உணவுகளுமே அளவுக்கு மீறினால் நமது நோய் எதிர்ப்பு திறனுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்துகின்றன.

  • பீட்சா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு முறைகள், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், துரித உணவுகளான ப்ரைடு ரைஸ் போன்ற உணவுகள் போன்றவை உடலுக்கு உடனடியாக இனிப்பு அல்லது உப்பு தன்மையினை அதிகப்படுத்துகின்றன. எனவே, நோய் எதிர்ப்பு திறன் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களை கட்டுபடுத்த முடியாமல் சக்தியை இழக்கிறது.

  • உடனே தயாரிக்கும் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவை உணவுகள் செயற்கை தன்மையான வேதியியல் முறைகளால் சுவையூட்டப்படுகின்றன. இது போன்ற உணவுகள் நம் உடலுக்குள் சென்ற பிறகு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக மாறிவிடுகிறது

  • ஆல்கஹால் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆல்கஹாலானது உடலின் செரிமான அமைப்பினை கடுமையாக பாதிக்க கூடியது ஆகும். இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான தூக்கம் தட்டுப்படும். ஆல்கஹாலினால் பாதிப்பு ஏற்படும் பொழுது அது நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கின்றது.

  • காபி மற்றும் டீயில் உள்ள காஃப்பின் எனப்படும் பொருளானது அளவுக்கு அதிகமாக நம் உடலிற்குள் செல்லும் பொழுது குடலினை பாதிக்கின்றது.

  • பூச்சிகொல்லி மூலம் பழுத்த பழங்கள், காய்கறிகள் நம் உடலுக்கு ஆபத்தானதாகும். ஒவ்வொரு பூச்சிகொல்லியும் செயற்கையான வேதியியல் பொருட்களினால் உருவாக்கப்படுகிறது. அதற்கென்று உடலினை பாதிக்க்கூடிய பக்க விளைவுகள் இருக்கின்றன. அதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய கூடும்.

  • டயட் சோடா எனப்படும் உடல் எடையினை கட்டுப்படுத்துவதற்கு குடிக்கும் பானங்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கின்றன. இவற்றை தவிர்ப்பது நல்லது.

  • கேக்ஸ், பிஸ்கட், ப்ரட் போன்ற தின்பண்டங்களில் பயன்படுத்தப்படும் ஒட்டுத்தன்மை கொண்ட பசைபொருளானது பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. மைதா, கோதுமையினை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதற்காக இந்த செயற்கையான பொருள் இந்த தின்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது. அது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை வெகுவாக குறைக்கின்றன. எனவே இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்