பொதுவாக இன்றைய காலத்தில் பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. எப்போது ஒருவரது உடலில் ஆரோக்கியமற்ற அளவிற்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
ஒருவர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதை நீண்ட காலமாக கட்டுப்பாட்டில் வைக்காமல் விட்டுவிட்டால், இந்நிலை பக்கவாதத்திற்கு கூட வழிவகுக்கும்
அவ்வப்போது மருத்துவரை சந்தித்து, இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். அதிலும் 30 வயதிற்கு மேலாகிவிட்டால் கட்டாயம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க விரும்பினால் இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கிய உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் அதி உயர் அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க விரும்புபர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸை எடுத்து கொள்ளலாம். தற்போது அந்த ஜூஸை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- தக்காளி - 1 (நறுக்கியது)
- கேரட் - 1 (நறுக்கியது)
- புதினா இலைகள் - 6-7
- இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- எலுமிச்சை - பாதி (சாறு எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை
முதலில் பிளெண்டரில் தக்காளி, கேரட், இஞ்சி, புதினா இலைகளைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றினை ஊற்றி கலந்து குடிக்க வேண்டும்.
இந்த ஜூஸை காலை உணவின் போது குடிக்கலாம் அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலும் குடிக்கலாம்.
குறிப்பு
உங்கள் உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதாக இருந்தாலும், மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.