தூங்குவதற்கு முன்னர் இந்த செயல்களை எல்லாம் நிச்சயம் செய்யவே கூடாது! மீறினால் ஏற்படும் விளைவுகள்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
857Shares

நாம் இரவில் தூங்குவதற்கு முன்னர் சில செயல்களை செய்யக்கூடாது.

அப்படி மீறி செய்தால் வீண் மன உளைச்சல், ஜீரணம், மற்றும் தேவையில்லாத உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படும்.

அதிகம் நீர் அருந்த கூடாது

உறங்குவதற்கு முன்னர் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு குடிக்கும் போது சிறுநீர் கழிக்க அடிக்கடி எழும்ப வேண்டி வரும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும். சிலர் தூங்கும் ஆர்வத்தில் சிறுநீர் கழிக்காமல் அடக்குவர். அவ்வாறு செய்வதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே உறங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குட்டித்தூக்கம் வேண்டாமே

மதியம் உணவிற்கு பிறகு சிறிது நேரம் உறங்கும் பழக்கம் பொதுவாக சிலருக்கு உண்டு .இந்த பழக்கம் இரவில் நல்ல துக்கம் வராமல் தடுக்கும். மதியம் தூங்குவதால் இரவில் சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல், தூக்கமின்மை போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த குட்டி தூக்கத்தால் உடல் எடை கூடும்.

செல்ஃபோன் பார்க்கக்கூடாது

தூங்க செல்லுவதற்கு முந்தைய நிமிடம் வரை கணினி திரையையோ, செல்ஃபோனையோ,பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம், இன்றைய மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. அனால் அது மிகவும் தவறு. இதனால் கண்கள் சோர்வடைகின்றன. கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் செல்ஃபோன் ஸ்க்ரீனில் இருந்து விழும் வெளிச்சம், முகத்தில் படுவதால் முகத்தில் தோல் சுருக்கம் எற்பட வாய்ப்பிருக்கிறது.

உடற்பயிற்சி

தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்வது என்பது, ஒரு போதும் செய்யக் கூடாத காரியம். உடற்பயிற்சியில் ஆர்வம் மிக்க சிலர் நேரம் காலம் பார்க்காமல், உடற்பயிற்சியில் ஈடுபடுவர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. உறங்குவதற்கு 3 மணி நேரம் முன்னதாக எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்து முடிக்க வேண்டும்.

உறங்கும் முன் காஃபி வேண்டாம்

உறங்குவதற்கு முன்னதாக காஃபி குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவ்வாறி செய்வது மிகவும் தவறு. காஃபியில் இருக்கும் கஃபைன் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நாம் உறங்குவதே மூளை ஓய்வெடுத்துக்கொள்ள தான். அப்படி இருக்கையில் உறங்க செல்லும் முன் நாம் குடிக்கும் காஃபி, நமது தூக்கத்தையும் கெடுத்து மூளையையும் குழப்பிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்