தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதை சாப்பிடுங்க... உடலில் பல அதிசயங்கள் ஏற்படுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
274Shares

ஆளி விதை குளிர் காலநிலை பகுதிகளில் பயிரிடப்படும் ஒரு நார்ப்பயிர் ஆகும்.

இதன் பயன்பாடு மக்களிடையே பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இது அதிக அளவு ஐரோபிய, ஆசிய நாடுகளில் பயிரடப்படுகின்றது.

மஞ்சள் நிறத்திலும், சிவந்த காப்பி நிறத்திலும் இந்த விதை இருக்கும். இதை அதிக அளவு மக்கள் உணவுக்காக பயன்படுத்துவார்கள்.

இந்த ஆளி விதையில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜனின் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள லிக்னான்ஸ் என்ற சத்துக்களும், கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது.

தினமும் ஆளி விதையை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

 • ஆளி விதைகளை தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.

 • ஆளி விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள் உள்ளதால், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. கூடுதலாக, ஆளி விதைகளில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்னும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

 • தினமும் 30 கிராம் ஆளி விதையை 6 மாதங்களுக்கு சாப்பிட்டவர்களது இரத்த அழுத்தம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு ஏற்கனவே இரத்த அழுத்த மருந்துகளை எடுத்து வருபவர்களுக்கும் இது உதவுகின்றது.

 • ஆளி விதைகளை தொடர்ச்சியாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயம் குறையும்.

 • ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலெனிக் கொழுப்பு அமிலம் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கிறது.

 • ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு நார்ச்சத்துக்களும் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான விகிதத்தைக் குறைத்து, அதன் மூலும் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே வேளையில் கரையாத நார்ச்சத்து அதிக நீரை மலத்துடன் பிணைக்க அனுமதித்து, மலம் எளிதில் வெளியேறச் செய்கிறது.

 • ஆளி விதையை சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து, பெண்கள் மற்றும் அதிக கொழுப்புள்ளவர்களுக்கு நன்மைகளைத் தருகிறது.

 • ஆளிவிதைகளில் உள்ள நார்ச்சத்து பித்த உப்புக்களுடன் பிணைந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக, இரத்தத்தில் இருந்து கொழுப்புக்கள் பிரித்தெரிடுக்கப்பட்டு கல்லீரலுக்குள் இழுத்து பித்த உப்பாக மாற்றி, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

 • பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை ஹாட் ஃப்ளாஷ். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை சாப்பிடுவது நல்லது.

 • டைப்-2 சர்க்கரை நோயை எதிர்த்துப் போராட ஆளி விதை பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு காரணம் அதில் உள்ள கரையாத நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஆளி விதை ஒரு சிறப்பான உணவுப் பொருள்.

 • ஆளி விதை பசியைத் தடுக்கிறது. பசியை ஆளி விதைக் குறைப்பதால், இது ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், தினமும் 25 கிராம் ஆளி விதை பொடியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்