சிறுநீரை வெகுநேரம் அடக்கி வைப்பதால் ஏற்படும் பிரச்சனை என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
855Shares

பொதுவாக நம்மில் பலர் வேலைப்பளு, பயணம் மேற்கொள்ளும் சமயம், வகுப்பறை நேரங்கள் இது போன்ற சமயத்தில் ஒரு சிலர் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு சிறுநீரை அடக்குவதால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் தற்போது சிறுநீரை அடக்கி வைப்பதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையின் அளவை அதிகரிக்கலாம் மற்றும் அதன் சதைகளை விரிவுபடுத்தலாம். இந்த மாற்றங்கள் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது.

  • சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீரை வெளியிடும் பிளேடருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல் நம்மை அறுவை சிகிச்சைக்கு நம்மை கொண்டுச்செல்லலாம்.

  • சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீரகங்களின் அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் வடுக்கள் ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் கடுமையான சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும்.

  • சிறுநீரைத் அடுக்குவதால் அது சிறுநீரக கல் ஏற்பட காரணமாக அமையும்.

  • சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும், இது வலியை ஏற்படுத்தும். இந்த வலி சிறுநீரகத்தையும் அடையலாம்.

  • சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும். கழிப்பறை சுத்தமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நாம் அங்கு சிறுநீர் கழிக்க போகும்போது, ​​பாக்டீரியா வளர வாய்ப்பு கிடைக்கக்கூடும், இது சிறுநீக பை வரையிலும் பாதிக்கலாம். இந்த தொற்று பல தீவிர நோய்களை ஏற்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்