எலுமிச்சை ஜூஸில் கருப்பு உப்பு சேர்த்து குடித்தால் உடலில் என்னென்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
184Shares

கருப்பு உப்பு சமையலில் ஒரு பொதுவான மூலப்பொருளாகும். இதில் இயற்கையான கனிமங்கள் மிக அதிகம் உள்ளன .

வெள்ளை உப்பிற்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான மூலப்பொருள் வேண்டுமென்றால் அதற்கு கருப்பு உப்பை பயன்படுத்தலாம்.

ஏனெனில் கருப்பு உப்பு மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.

ஆயுர்வேதத்தின்படி கருப்பு உப்பு வாதம் மற்றும் பித்தம் ஆகிய இரண்டையும் சமநிலை செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு கருப்பு உப்பு பெரிதும் உதவி புரிகின்றது.

ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதால் சிறந்த பலன் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

அந்தவகையில் கருப்பு உப்பு சேர்த்த எலுமிச்சை நீர் பருகுவதால் உண்டாகும் சில ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

​கருப்பு உப்பு சேர்த்த எலுமிச்சை நீர் தயாரிப்பது எப்படி ?

  • வெதுவெதுப்பான நீர் அல்லது சாதாரண நீர் ஒரு க்ளாஸ் எடுத்துக் கொள்ளவும். குளிர்ந்த நீரைத் தவிர்ப்பது நல்லது.

  • இந்த நீரில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு சேர்க்கவும்.

  • உப்பு கரையும் வரை நீரை நன்றாகக் கலக்கவும்.

  • இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம் அல்லது உணவ அருந்திய பின் பருகலாம்.

நன்மைகள் என்ன?

  • இந்த புளிப்பு சுவை கொண்ட கருப்பு உப்பு சேர்க்கப்பட்ட எலுமிச்சை நீர் செரிமான கோளாறுகளை நிர்வகிக்க உதவுகிறது. உங்கள் குடல் இயக்கம் மென்மையாகவும் சீராகவும் மாறுகிறது.

  • இந்த மூலப்பொருட்கள் இரண்டுமே எடை இழப்பிற்கு உதவுகின்றன.

  • இது தவிர, இந்த நீர் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதனால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடை இழப்பு செயல்பாடு எளிதாகிறது

  • கருப்பு உப்பு சேர்க்கப்பட்ட எலுமிச்சை நீர் செரிமான பாதையின் pH அளவை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் அசிடிட்டி, சரும நோய்கள் , கீல்வாதம், எலும்புப்புரை போன்ற நோய்கள் உண்டாவதற்கான பிரச்சனைகள் குறைகிறது.

  • நீங்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து அதிக ஊட்டச்சத்துகளை உறிஞ்ச கருப்பு உப்பு உதவுகிறது. இந்த பானத்தில் ஆன்டிஆக்சிடெண்ட் அளவு அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்