அடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா? இதிலிருந்து எப்படி விடுபடலாம்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
733Shares

இன்றைய காலத்தில் அடிக்கடி சந்திக்கம் பிரச்சினைகளில் வாயு பிரச்சினையும் ஒன்றாகிவிட்டது.

வாயு பிரச்சனையானது ஒருவரது செரிமான மண்டலத்தின் அதிகப்படியான வாயு சேகரிக்கப்படும் நிலையாகும்.

அதிலும் வாயு சரியாக வெளியேற்றப்படாவிட்டால் அல்லது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

இதுபோன்ற அசௌகரியங்களை சந்திக்கமால் இருக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 • உண்ணும் உணவுகளால் வாய்வு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் 1/2 டீஸ்பூன் ஓம விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடியுங்கள்.
 • டேபிள் ஸ்பூன் சீரக விதைகளை 2 கப் நீரில் போட்டு 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, உணவு உண்ட பின் குடியுங்கள்.
 • 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், வாயு பிரச்சனை உடனடியாக நீங்கும். ஏனெனில் பெருங்காயம் அதிகப்படியான வாயுவை உற்பத்தி செய்யக்கூடிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு வாயு எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது.
 • ஒரு டீஸ்பூன் நற்பதமான துருவிய இஞ்சியை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, உணவு உண்ட பின் சாப்பிட்டால் வாயு பிரச்சனையே ஏற்படாது. இன்னும் எளிமையான ஒரு தீர்வு வேண்டுமானால், இஞ்சி டீ போட்டு குடியுங்கள்.
 • உடலில் உள்ள அதிகப்படியான வாயுவைக் குறைக்க ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் நீரில் கலந்து, உணவு உண்ட பின் குடித்தால், வாயு தொல்லை ஏற்படாது.
 • திரிபலா பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும். திரிபலா பொடியை சேர்க்கும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகளவு இருக்கிறது. அதிகமாக எடுத்தால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கிவிடும்.
வாயு பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்
 • பீன்ஸ்
 • முட்டைக்கோஸ்
 • கொண்டைக்கடலை
 • பருப்பு வகைகள்
 • சர்க்கரை நிறைந்த பானங்கள்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்