குதிகால் ரொம்ப வலிக்குதா? இந்த வலியை போக்க இவற்றை செய்தாலே போதும்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
395Shares

பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் குதிகால் வலி.

குதிகால் வலி வருவதற்கு காயங்கள், பிடிப்புகள், எலும்பு முறிவு, உடல் பருமன் மற்றும் பொருந்தாத காலணிகளை அணிவது போன்றவைகளும் முக்கிய காரணங்களாகும்.

இதனால் சாதாரண செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாமல் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

இதனை எளிய முறையில் சில வீட்டு பொருட்கள் கொண்டு வலியை போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அந்த வாளியில் பாதங்களை 5-10 நிமிடம் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை என 1-2 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

  • ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி, அதை ப்ரீசரில் வைத்து நன்கு உறைய வையுங்கள். பின் அந்த பாட்டிலை எடுத்து வலியுள்ள குதிகாலுக்கு அடியில்10-15 நிமிடம் வைத்து உருட்டுங்கள். இந்த சிகிச்சையை நீங்கள் எப்போதெல்லாம் குதிகாலில் வலியை உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் வையுங்கள்.

  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை ஹீல் ஸ்பர் உள்ள இடத்தின் மீது தடவி பேண்டேஜ் கொண்டு சுற்றிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • ஒரு வாளியில் பாதங்கள் மூழ்கும் அளவில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதிக்கப்பட்ட குதிகாலை வைத்து, 10-15 நிமிடம் ஊற வைக்கவும். பின் மென்மையாக குதிகாலில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பின் குதிகாலில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்ய விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

  • பாதிக்கப்பட்ட இடத்தில் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, சில மணிநேரம் ஊற வையுங்கள். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்யுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்