அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொண்டால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
503Shares

ஜவ்வரிசி என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருளாகும்.

ஜவ்வரிசியில் உள்ள ஊட்ட சத்துக்கள் புரோட்டீன் , கார்போஹைடிரேட் , கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்களும் குறைவான கொழுப்பு சத்தும் உள்ளன.

ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது.

எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

lekhafoods

  • ஜவ்வரிசியில் பொட்டாசியம் உள்ளதால் இது இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக நிகழ உதவி செய்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டம் இருப்பதால் இதயத்தில் உள்ள மன அழுத்தம் குறைகிறது.

  • ஜவ்வரிசியில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால் அவை கரு வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் ஜவ்வரிசியானது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

  • ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க விரும்புபவராக இருந்தால் உங்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

  • ஜவ்வரிசியானது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியாதல் போன்ற செரிமானம் தொடர்பான எந்த பிரச்சனையையும் இது சரி செய்கிறது. ஏனெனில் ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.

  • ஜவ்வரிசியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. அவை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவிப்புரிகின்றன. இதனால் எலும்பு வலுவடைகிறது. எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வராமல் தடுக்கிறது.

  • ஜவ்வரிசி அதிகமான கார்போஹைட்ரேட்களை கொண்டிருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் ஜவ்வரிசியை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்