நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த குடிங்க போதும்...! வேறு நன்மைகளும் உண்டு

Report Print Kavitha in ஆரோக்கியம்
2318Shares

இன்றைய காலத்தில் பல்வேறு நோய்களை உருவெடுத்து நம்மை வாட்டி வதைத்து கொண்டு வருகின்றது. இவற்றிடமிருந்து போராடி வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியமானது ஆகும்.

ஏனெனில் நோய், தொற்று மற்றும் காயங்களிலிருந்து சீக்கிரம் குணமாக நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும்

இதனால் தான் ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி என்பதால் வல்லுநர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க வலியுறுத்துகிறார்கள்.

அந்தவகையில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் இயற்கை மூலிகை டீ ஒன்றை எப்படி தயாரிக்கலாம், இதனால் என்னென்ன பயன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • க்ரீன் டீ பேக் - 2
  • சிறிய வெள்ளரிக்காய் - 1
  • புதினா இலைகள் - 1 கப்
  • தேன் - 1/4 கப்
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.

பின் அந்த நீரில் க்ரீன் டீ பேக்குகள், புதினா இலைகள் மற்றும் சில வெள்ளரித் துண்டுகளைப் போட்டு, 15 நிமிடம் மூடி வைக்கவும்.

அதே சமயம் 1/4 கப் தேனில், 1/4 கப் சுடுநீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது டீயை வடிகட்டி, தேன் கலந்த நீரில் கலந்து கொள்ளவும். மேலும் 4 கப் நீரையும் சேர்த்து கலந்து கொண்டு, அதில் சில வெள்ளரிக்காய் துண்டுகளையும், ஐஸ் கட்டிகளையும் போட்டால், சுவையான வெள்ளரி புதினா டீ தயார்.

பெறும் நன்மை என்ன?
  • காபிக்கு சிறந்த மாற்றாக மற்றும் ஒரு ஆரோக்கியமான நாளின் தொடக்கத்திற்கான சிறந்த பானமாக வெள்ளரி புதினா டீ இருக்கும்.
  • மதிய வேளையில் அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ட பின் ஒரு டம்ளர் வெள்ளரி புதினா டீ குடித்தால், எவ்வித அஜீரண கோளாறும் ஏற்படாது.
  • இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பல பகுதிகளில் ஈடுபடக்கூடியது. வெள்ளரிக்காய் புதினா டீயை தினமும் குடிக்கும் பழக்கம் இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபடுத்தப்படுவதோடு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.
  • வெள்ளரிக்காய் புதினா டீயை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தில் இருந்து விலகி இருக்கலாம்.
  • நீங்கள் சோர்ந்து இருக்கும் போது, ஒரு டம்ளர் வெள்ளரி புதினா டீயைக் குடித்தால், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். அதிலும் இந்த பானத்தை வெயில் காலத்தில் குடித்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு, அதிகப்படியான வெப்பத்தால் உடல் வறட்சி அடைவதும் தடுக்கப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்