ஆண்களே! இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
528Shares

பொதுவாக எந்தெந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது என அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியே உள்ளது.

நல்ல ஆரோக்கியமான உணவுகளும் கூட அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை இப்பழமொழியின் கருத்தாகும்.

பெண்களை போல் ஆண்களும் சில உணவுகளை அளவோடு உண்ணுவது அவசியமானதாகும். இல்லை என்றால் இது உடலுக்கு கேடு விளைவிப்பையாக அமைந்து விடுகின்றது.

அந்தவகையில் ஆண்கள் எந்தெந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. நீர்வறட்சி உடல் பாகங்களில் செயற்திறன் குறைபாடு ஏற்பட காரணமாகிறது. முக்கியமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டை இது குறைக்கிறது.
  • கற்றாழை ஜூஸ் அளவுக்கு மீறினால் தசை பிடிப்புகள், கால்சியம் குறைபாடு போன்றவை உண்டாகும் அபாயமும் இருக்கிறது.
  • அதிகமாக பால் உணவுகள் எடுத்துக் கொள்வது, உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைய காரணமாகிவிடுகிறது. மேலும், இது இரத்தசோகை ஏற்படவும் காரணியாக அமைகிறது.
  • நட்ஸ் அளவுக்கு அதிகமாக நட்ஸ் உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைகிறது. ஏனெனில், இவற்றால் கலோரிகள் அதிகம்.
  • அளவுக்கு அதிகமாக ஓட்ஸ் உண்பதால்,குமட்டல், வாயுப் பிரச்சனைகள் உண்டாக காரணியாகிவிடுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்